செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிக்கிகல்ராணி.. அவரே மாப்பிள்ளை, விரைவில் டும் டும் டும்

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷின் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பிறகு இவர் மரகதநாணயம், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்தார். நிக்கி கல்ராணிக்கு தமிழ்சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நிக்கி கல்ராணி இடியட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஒருவருடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சக நடிகர்களுடன் கிசுகிசு வருவது என்பது சாதாரண ஒன்றுதான். அப்படி கிசுகிசுவாக வந்த செய்தி தான் நிக்கிகல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக வந்த செய்தி. நடிகர் ஆதி ஈரம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு இவர் நடிப்பில் அய்யனார், ஆடுபுலி, அரவான் போன்ற படங்கள் வெளியானது.

இந்நிலையில் மரகதநாணயம், யாகவராயினும் படங்களில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து ஆதியின் வீட்டு விசேஷத்தில் நிக்கி கல்ராணி கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது.

இது இவர்களின் காதலை உறுதிப்படுத்துகிறது என கிசுகிசுக்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த வருடமே திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தச் செய்தியை கூடியவரையில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் அறிவிப்பார்கள் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். சினிமாவில் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளை திருமணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் சினிமாவில் அடுத்த நட்சத்திர ஜோடிகளாக ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் வலம் வருவார்கள்.

Trending News