Budget 2024-25: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி இந்த பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை விலாவாரியாக காண்போம். அதில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் 2.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டமும் நடைமுறைக்கு வர இருக்கிறது.
மேலும் சோலார் முறையில் மின்சார வசதி செய்யப்படும். வீடுகளில் இதை அமைப்பதன் மூலம் 300 யூனிட்டுகள் வரை இலவசம் மின்சாரம் பெற முடியும். அடுத்ததாக முத்ரா திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் கடன் தொகை 10 லிருந்து 20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதேபோல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திட்டங்களுக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தங்க நகைகளின் விலை குறையுமா.?
இதைத்தொடர்ந்து விவசாயம் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயோ உரங்கள் வழங்குவது, காய்கறி விற்பனை, பயிர் சாகுபடி சர்வே ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். மேலும் 1.52 லட்சம் கோடி விவசாய துறைக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர கல்வி மேம்பாடு, பெண்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. பிளாட்டினத்திற்கு 6.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நகைகளின் விலை குறையும் என தெரிகிறது.
மேலும் மூன்று வகை புற்று நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு, செல்போன் உதிரி பாகங்கள் விலை குறைப்பு ஆகியவையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்குவதில் இருந்து 3 கோடி குடும்பங்களுக்கு வீடு என்பது வரை இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்திற்காக 26 ஆயிரம் கோடியும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக 15,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். புதிதாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். ஆனால் அவர்களின் சம்பளம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கிறது.
நிதியாண்டின் பட்ஜெட் சிறப்பம்சங்கள் திருப்தி அளித்ததா.?
- மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலன் மாஸ்க்
- எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு மின்சார கட்டண உயர்வு
- தமிழர்களுக்கு பிரதிநித்துவம் கொடுக்காத மத்திய அமைச்சரவை