வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தொப்பையும் தொந்தியுமாக மாறிய நித்யா மேனன்.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைசில் இருக்குபா!

மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நித்யா மேனன் தமிழிலும் காஞ்சனா-2, மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்கும் வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

கடைசியாக இவர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து சைக்கோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த நித்யா மேனன் தற்போது தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

இயல்பாக சற்று பூசிய உடல்வாகுடன் இருக்கும் நித்யா மேனன் அந்த புகைப்படத்தில் இன்னும் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு காணப்படுகிறார். மேலும் தொப்பை வெளியில் தெரியும்படி இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

nithya menon
nithya menon

சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் அவர் மீண்டும் தன்னுடைய உடல் எடையை ஏற்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை உருவகேலி செய்து கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்று கமெண்ட் கொடுக்கும் ரசிகர்களுக்கு நித்யா மேனன் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

Trending News