செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நம்ம ரசிகர்களை வளைத்து போட்ட நிவின்பாலியின் 5 படங்கள்.. மறக்க முடியுமா மலர் டீச்சர், ஜார்ஜ் டேவிட் கம்போ

நிவின்பாலி மலையாள நடிகராக இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் நேரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். மேலும் தொடர்ந்து இவர் படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

நேரம்: 2013 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் காமெடி, திரில்லர் கலவையான படமாக அமைந்தது. இந்த படத்தில் மூலம் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா தமிழில் அறிமுகமானார்கள். இந்தப் படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இருக்கும் ஐந்து கேரக்டரும் குறிப்பிட்ட நேரத்தில் வரும் பிரச்சனையை ஒவ்வொருவரும் எப்படி சந்திக்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also readஎலியை பிடித்து தொங்கும் நிவின்பாலி.. நேரம் பட நடிகருக்கும் நேரமே சரியில்லபா

பிரேமம்: 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பின்னர் வணிக ரீதியாக அதிகமான அளவில் வசூலில்வெற்றி பெற்றது. இந்த படத்தில் மலர் டீச்சர் மற்றும் ஜார்ஜ் டேவிட் கம்போ ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடித்தனர். இந்தப் படத்தில் நடித்தது மூலம் தான் நிவின்பாலி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பார். பல முறை பார்த்தும் சலிப்பு ஏற்படுத்தாத படத்தில் இதுவும் ஒன்று.

பெங்களூர் டேஸ்: 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி மற்றும் நஸ்ரியா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான விருது நிவின்பாலிக்கு கிடைத்துள்ளது. பெங்களூரில் இந்த மூன்று நண்பர்களும் பயணிப்பதை அழகாக காண்பித்த படம். இது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Also read: உருவ கேலியால் நொந்துபோன பிரேமம் பட நிவின்பாலி.. 25 கிலோ குறைத்து மிரட்டிவிட்ட வைரல் புகைப்படம்

ஒரு வடக்கன் செல்பி: 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம். இப்படத்தில் நிவின் பாலி மற்றும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்று உள்ளது. ஆனாலும் இந்தப் படத்திற்கு கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இதை வெற்றிகரமான மலையாள படம் என்று அழைத்தனர்.

லவ் ஆக்சன் டிராமா: 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாள காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தில் நிவின் பாலி, நயன்தாரா மற்றும் சுமன் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க வேடிக்கை நிறைந்த படமாகவும் மற்றும் லவ் ஆக்ஷன் டிராமா கலவையான படமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபீஸில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: நிஜத்திலேயே ரெண்டு இல்ல, படத்துல 2வது இடமா.? கோபத்தில் டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா

Trending News