Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நிவின் பாலிக்கு இப்படி ஒரு கேரக்டரா.? லோகேஷ் கொடுத்த டுவிஸ்ட்

நிவின் பாலிக்கு இப்படி ஒரு கேரக்டரா.? லோகேஷ் கொடுத்த டுவிஸ்ட்

Nivin Pauly : மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நிவின் பாலி. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடை […]

Nivin Pauly : மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நிவின் பாலி. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடை கூடி பருமனாக இருந்தார்.

நிவின் பாலியா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது. சில நாட்களிலேயே தனது உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது மீண்டும் தமிழில் என்ட்ரி கொண்டிருக்கிறார். அதாவது லோகேஷ் கனகராஜ் பென்ஸ் என்ற படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.

பொதுவாகவே லோகேஷ் கைதி, விக்ரம், லியோ என்ற தொடர் கதைகளை தனது எல்சியூவில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் பென்ஸ் படமும் எல்சியூவில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் நிலையில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

நிவின் பாலியை செதுக்கிய லோகேஷ்

இதற்கான வித்தியாசமான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்போது இந்தப் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நிவின் பாலி ரத்தம் தெறிக்க உக்கரமாக இருக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது.

அதுவும் முகம் முழுக்க ரத்தம், கழுத்து நிறைய நகை என வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இதிலிருந்தே பென்ஸ் படத்தில் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இதுவரை ரசிகர்களின் காதல் நாயகனாக வலம் வந்த நிவின் பாலியை வில்லன் கெட்டப்பில் மிரட்ட உள்ளார் லோகேஷ். மேலும் இப்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெற்று இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.