வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெளியில வரும்போது கர்ப்பமா தான் வருவீங்க! பிக் பாஸ் வீட்டில் காஜி நிக்சனின் மன்மத லீலை

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சீசன்களில் நிக்சன் அளவுக்கு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் என்று யாரையுமே சுட்டிக் காட்ட முடியாது. நிக்சனின் மன்மத லீலைக்கு பலியாகி மொத்தமாக பேரை கெடுத்துக் கொண்ட ஐஷு இன்று வரை வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார் ஆனால் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிக்சன் தன்னுடைய வேலையை மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து விட்டார்.

நாம் ஒரு போட்டியில் பங்கேற்று இருக்கிறோம், நம்மைச் சுற்றி 100 கேமராக்கள் இருக்கிறது என்பதை மறந்து நிக்சன் மட்டமான வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஐஷு உள்ளே இருக்கும் வரை அவரை உரசிக்கொண்டு, அவர் பக்கத்திலேயே அமர்ந்திருப்பதை தவிர நிக்சன் எதுவுமே செய்ததில்லை. ஐஷுவெளியேறியதும் இனி நிக்சன் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, அவர் அடுத்த ஆளை ரெடி பண்ணி பட்ட நாமம் போட்டு இருக்கிறார்.

நிக்சன் மற்றும் பூர்ணிமா கடந்த வாரம் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனம் ஆடியது எல்லோருமே முகத்தை சுளிக்கும் அளவுக்கு இருந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் நாங்கள் டான்ஸ் ஆடுகிறோம் என்ற பெயரில் அதிக நெருக்கத்தை காட்டி வந்தார்கள். இத்தனைக்கும் உங்க கூட டான்ஸ் ஆடும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்குது என சொல்லிய நிக்சன் உடன் பூர்ணிமா மீண்டும் நடனம் ஆடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

Also Read:உங்க 5 பேருக்கு தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல.. கேமராவில் சிக்கிய காஜி ஜோடிகள்

பெண்களை இப்படி எல்லாம் பேசாதீங்க, கை நீட்டி பேசாதீங்க, பெண்கள் பாதுகாப்பு என கதறிய பூர்ணிமா நீங்க அழகா இருக்கீங்க என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு நிக்சனுக்கு அடிமையாகி விட்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பூர்ணிமா அக்கா என்று சொல்லிக் கொண்டிருந்த நிக்சனின் இத்தகைய செயல்பாடுகள் ரொம்பவே அருவருக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

எல்லை மீறும் நிக்சன் மற்றும் பூர்ணிமா

ஏற்கனவே பகல் நேரங்களில் நிக்சன் மற்றும் பூர்ணிமா ஒரே போர்வையை மூடிக்கொண்டு சும்மா படுத்து பேசுகிறோம் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து வந்தார்கள். செய்ததெல்லாம் பத்தாது என்று இப்போது இரவில் எல்லையை மீறி இருக்கிறார்கள். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் லைவ் ஷோ என்பதை மறந்து விட்டு பூர்ணிமா வேலையை பார்த்து இருக்கிறார்.

ஸ்மால் பாஸ் வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு பூர்ணிமா நிக்சனின் படுக்கைக்கு சென்று அவருடன் படுத்துக் கொண்டார். இருவரும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டார்கள். அதன் பின்னர் அவர்கள் எதிரே இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஒளிபரப்பாமல் தூரத்தில் இருக்கும் கேமராவில் தான் அவர்கள் இருவரும் நெருக்கமாக படுத்து பேசிக்கொள்வது போல் காட்டப்பட்டிருக்கிறது. ஒருவேளை பூர்ணிமா எதிர்பார்க்கும் பெண்கள் பாதுகாப்பு இதுதான் போல.

Also Read:நிக்சனைப் போல் விதியை மீறிய மணி.. கண்டுக்காமல் போன பிக்பாஸ், காரணம் இதுதான்

Trending News