செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அர்ச்சனாவை மரியாதை இல்லாமல் பேசி, தாக்க முயன்ற நிக்சன்.. எல்லை மீறும் பிக் பாஸ் வீடு

BB7 Tamil Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த ஏழாவது சீசன் ஆரம்பத்தில் பரபரப்பாக சென்றாலும் இப்போது நடக்கும் விஷயங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஒரு ஆட்டம் எல்லை மீறி போகும் பொழுது அதை தடுத்து நிறுத்தாமல் அந்த சேனல் டிஆர்பிக்காக வேடிக்கை பார்க்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் அர்ச்சனா ஏற்கனவே சில எபிசோடுகளை பார்த்து மக்கள் மனதை படித்துவிட்டு வந்திருக்கிறார். வெளியில் பார்வையாளர்களுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை குறிவைத்து தாக்கி வருகிறார். இதனால் தான் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

Also Read:அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

வீட்டிற்குள் வந்த முதல் நாளிலிருந்து ஒவ்வொருவரையும் கட்டம் கட்டி அடித்து வரும் அர்ச்சனா அடுத்து குறி வைத்திருப்பது நிகானை தான் அர்ச்சனா வீட்டிற்குள் வந்த முதல் வாரத்திலேயே நிக்சன் அவருடன் பயங்கரமாக சண்டையிட்டு இருக்கிறார் இன்று வெளியான ப்ரோமோ வேணும் இவர்கள் இருவருக்குள்ளும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக முற்றுகிறது.

இன்று வெளியான ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டின் பெட்ரூமில் இந்த சண்டை நடக்கிறது. இருவரும் பயங்கரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அர்ச்சனா திடீரென்று வினுஷா விஷயத்தை பற்றி பேசுகிறார். இதனால் நிக்சன் பயங்கரமாக டென்ஷன் ஆகி கத்துகிறார். ஒரு கட்டத்தில் வார்த்தை எல்லை மீறி அர்ச்சனாவை வாடி போடி என்று பேச ஆரம்பித்துவிட்டார்.

அர்ச்சனாவும் வாடா போடா என்று நிக்சனை பார்த்து பேசுகிறார். இதனால் ரொம்ப டென்ஷன் ஆன நிக்சன் அர்ச்சனாவை அடிப்பது போல் ஓடுகிறார். அவரை சரவண விக்ரம், விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் தடுக்கிறார்கள். விசித்ராவும் அந்த இடத்தில் தான் இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்ப்பதற்கு ரொம்பவே வெறுப்பாக இருக்கிறது.

தரக்குறைவாக பேசுவது, அடிக்க ஓடுவது என இந்த விளையாட்டு எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. என்ன நடந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு டிஆர்பி தான் முக்கியம் என விஜய் டிவி சேனல் இது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் கமல் இந்த சண்டைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:தளபதி 68 பட வாய்ப்பு பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி

 

 

 

 

 

 

 

Trending News