வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆண்டவரின் அதிரடியில் ஆடிப்போன நிக்சன்.. டிசிபி ராகவனாக வேட்டைக்கு தயாராகும் கமல்

Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ரணகள சம்பவங்கள் நடந்தது. ஆனால் நிக்சன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று சொன்ன ஒரு வார்த்தை தான் இப்போது பெரும் பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.

அதேபோல் சனிக்கிழமை ஆண்டவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ புல்லரிக்க வைக்கும் வகையில் இருந்தது. அதிலும் கமல் வேட்டையாடு விளையாடு டிசிபி ராகவனாக மாறி நிக்சனை வெளுத்து கட்டி இருக்கிறார்.

Also read: ஓட்ட வாயை பூர்ணிமாவிடம் போட்டுக் கொடுத்த விஜய் வர்மா.. அநியாயமா ஒரு காதல் ஜோடிய பிரிச்சிட்டீங்களே!

அவருடைய இந்த அதிரடியை எதிர்பார்க்காத போட்டியாளர்களும் மிரண்டு போயிருக்கின்றனர். அதன்படி அர்ச்சனா இந்த விவகாரத்தில் உரிமை குரல் தூக்கி இருக்கிறார். அதை விசாரிக்க வந்த கமல் நிக்சனிடம் சொருகிடுவேன்னு சொன்னிங்களே எங்க சொருகுவீங்க.

இங்கயா இங்கயா என கேட்டு வேட்டையாடு விளையாடு படத்தில் கண்ணை காட்டுவது போன்று செய்த கமலை பார்க்கும்போது இன்று சம்பவம் உறுதி என தெரிகிறது. இதனால் வாயடைத்துப் போன நிக்சன் இன்னைக்கு நமக்கு அர்ச்சனை தயார் என்று ரீதியில் நிற்கிறார்.

Also read: பாவமன்னிப்பு கொடுக்க தயாராகும் ஆண்டவர்.. நியாயத்தை கட்டி காக்கும் கமலின் அலப்பறை

உடனே கமல் நீங்க சொருகுவதற்கு நான் ஒரு சின்ன இடம் பார்த்து தரேன் என மஞ்சள் கார்டை தூக்கி காண்பிக்கிறார். இதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் நிச்சயம் சிவப்பு கார்டு கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்து.

ஆனால் விஜய் டிவி அதை செய்யாது என்பது நாம் எதிர்பார்த்தது தான். அதைத்தான் கமலும் இப்போது செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்றைய எபிசோட் வேற லெவலில் இருக்கும் என்று நம்புவோம். அதற்காகவே இப்போது ஆடியன்ஸும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News