வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.. சிக்கலில் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நாயகி. வசீகர சிரிப்பும், கொள்ளை அழகுமாய் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு தற்போது சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களின் மனதில் ராணியாக இருந்த அவர் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார்.

மிரட்டலான கதை என்றாலே இந்த நடிகையை கூப்பிடும் அளவுக்கு நடிப்பில் பட்டையைக் கிளப்பி விடுவார். அந்தத் திறமையால் தான் அவருக்கு பிரமாண்ட இயக்குனரின் திரைப்படத்தில் இளவரசியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகைக்கும் ஏராளமான பாராட்டு கிடைத்தது.

இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த வேளையில் நடிகை ஹீரோக்களைப் போல ரிஸ்க் எடுக்கிறேன் என்ற பெயரில் உடல் எடையை ஏற்றி அந்த படத்தில் நடித்தார். அதன் மூலம் நடிகைக்கு பாராட்டு கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதன்பிறகு ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் நடிகை தொடர்ந்து சிக்கலை சந்தித்தார்.

இதனால் அந்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. பிறகு ஒருவழியாக ஏகப்பட்ட செலவுகள் செய்து நடிகையை ஒல்லியாக காண்பித்தார் அந்த இயக்குனர். ஆனால் அதன் பிறகு நடிகை எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவதை பார்த்த பல இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய தயங்கினார்கள்.

மேலும் சமீபத்தில் வெளியான பிரமாண்ட இயக்குனரின் திரைப்படத்திலும் அவர் பாலிவுட் நடிகையை தான் நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் நடிகைக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஹீரோக்களே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லையாம்.

இப்படி நாம் நெனச்சது ஒன்னு நடந்தது வேறாகிவிட்டதே என்று நடிகை தன் தோழிகளிடம் புலம்பி வருகிறாராம். எப்படியாவது எடையை குறைத்து புதிய படங்களில் கமிட்டாகவேண்டும் என்று நடிகை தீவிர முயற்சியில் இருப்பதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News