எந்த கொம்பனாலும் ரஜினியின் வளர்ச்சியை தடுக்கமுடியாது.. உடைத்து பேசிய பிரபலம்

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன கடின உழைப்பினாலும், தன் நடிப்பு திறமையினாலும் தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை புகழுக்கும் இத்தனை வயதிலும் தளராத மனம் கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்து நடிகராக வளம் வரவில்லை. ஒரு வில்லன் நடிகராகத்தான் முதலில் ஆறுமுகமானார், மற்றும் சில படங்களில் மிகவும் கொடூரமான வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து நடித்துருப்பார். மேலும் பைரவி, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

தனக்கான ஒரு ஸ்டைல், தனக்கான ஒரு வசன மொழி உச்சரிப்பு, என தனக்கான ஒரு அடையாளத்தையே உருவாக்கியுள்ளார் ரஜினிகாந்த். மேலும் இவரை பற்றி எதிர்மறையாக பேசக்கூடியவர்கள் குறைவு. இந்தவகையில் நடிகர் சிவகுமார் அவர்கள் ரஜினியை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

எந்த கொம்பனாலும் ரஜினியின் வளர்ச்சியை தடுக்கமுடியாது..

அதாவது ரஜினி ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர். ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் பிறகு ஹீரோவாக நடித்து இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நானும் ரஜினிகாந்த் அவர்களும் சேர்த்து நடித்த படம்தான் “புவனா ஒரு கேள்விக்குறி” என்ற படத்தில் நடித்திருந்தோம். அனைவரும் கூறுகிறார்கள் நான் விட்டுகுடுத்துவிட்டேன் அதனால் தான் ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்று.

ஆனால் அது உண்மையல்ல படம் முழுவதும் நடித்திருந்த கமல்ஹாசன் அவர்களே ரஜினிகாந்த் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற போது நான் என்ன செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் கருவில் உருவாகும் போதே அவருக்கான இடத்தை கடவுள் தேர்வு செய்கிறார் என்றும், ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார்-ஆக இருப்பது என்பது வெறும் நடிப்புத்திறமையாலும், அவரது ஸ்டைல் மட்டுமல்லாமல் அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது.

அந்த அதிர்ஷ்டம் ரஜினி அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும் என்றும் கூறியுள்ளார். நான் என்ன கமல்ஹாசன் என்ன? யார் நினைத்தாலும் ரஜினிகாந்த் அவர்களின் வளர்ச்சியையே தடுக்க முடியல என்றும் நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். இதன் மூலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் உள்ளது ரஜினிகாந்த் அவர்களின் வளர்ச்சி மற்றும் ஒருசிலரை பொறாமையயையும் அடையவைத்துள்ளது என்பதிலும் கூட எந்த மாற்றமும் இல்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →