திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காரும் கிடையாது, வீடும் கிடையாது.. 50 படங்களில் முக்கியமான ரோலில் நடித்த விஜய் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையை பயன்படுத்தி தமிழ் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் ஹீரோக்களாகவும் கலக்கி வருகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில் நடிகர் விஜய் திரைப்படத்தில் நண்பனாக நடித்த நடிகர் ஒருவர் இருக்க சொந்த வீடு கூட இல்லாமல் கவலையுடன் வலம் வருகிறார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு நடிகர் மம்முட்டி, முரளி, ரம்பா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வலம் வந்த அந்த நடிகர், தொடர்ந்து நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்தவர். அத்திரைப்படத்தின் கதையே அவரை வைத்து தான் நகரும்.

Also Read : 7 நாட்களில் 5 சர்ச்சைகளில் சிக்கிய விஜய்.. அடுத்தடுத்து விழும் பெரும் அடி

அந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் தற்கொலைப்படை தீவிரவாதியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே திரைப்படத்தில் கதாநாயகியை காதலிக்கும் அப்பாவியாகவும் நடித்திருப்பார்.

மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்திலும் , நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் வில்லனின் தம்பியாகவும், சுந்தர் சி இயக்கி நடித்த தலைநகரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என நடித்த அத்தனை திரைப்படங்களிலும் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் சசிகுமார் சுப்பிரமணி.

Also Read : காலை வாரிவிட்ட விஜய்.. நான் இருக்கிறேன் என கைதூக்கி விட்ட தனுஷ்

இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர்50 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.ஆனால் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இருப்பதற்கு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும்,சொந்தமாக கார் கூட தன்னிடம் இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்.

இவர் கூறியதை கேட்ட பலரும் இவருக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்புகளை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 90 கிட்ஸ்களின் விருப்பமான நடிகர்கள் திறமை இருந்தும் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.மேலும் கூடிய விரைவில் நடிகர் சசிகுமார் சுப்பிரமணியன் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து முன்னனி நாயகர்களுடன் நடித்தால் கட்டாயம் மக்கள் இவரை மீண்டும் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Also Read : இணையத்தில் ட்ரெண்டான அஜித் ஷாலினி ரொமான்டிக் புகைப்படம்.. துணிவு பிரமோஷன் யுக்தியா?

Trending News