
ஐபிஎல் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பல வெளிநாட்டு வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்து ஒரு கவர்ச்சிகரமான போட்டியை 1 7 வருடங்களாக நடத்தி வருகிறது இந்தியன் கிரிக்கெட் போர்டு. தற்போது இதன் 18-வது சீசன் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பல முக்கியமான வீரர்கள் இடம் பெறவில்லை. குறிப்பாக அதிரடி மன்னன் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டவ் போன்ற வீரர்கள் இதில் விலை போகவில்லை. டெல்லி அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வந்த வார்னர் இப்பொழுது சினிமாவில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் வெங்கி குடுமுலா,ராபின் ஹுட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டேவிட் வார்னர். ஏற்கனவே அவருக்கு ரீல்ஸ், மற்றும் சார்ட்ஸ் செய்வதில் அளவுகடந்த ஆர்வம் உண்டு. டிக் டாக் மற்றும் மியூசிக்கலி இருக்கும் காலத்திலேயே இவர் பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
பலமுறை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போட்ட ஸ்டெப்புகளை போட்டு அசத்துவார். இப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் விலை போகாததால் தான் நடித்த படமான ராபின் ஹுட் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
வருகிற மார்ச் 28ஆம் தேதி ராபின் ஹுட்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த விழாவின் பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீ லிலாவுடன் நடனம் ஆடியுள்ளார் வார்னர். மேலும் தெலுங்கில் ஐ லவ் யூ சொல்லியும் அசத்தியுள்ளார். அதை தெலுங்கு பாஷையில் அவர் “நேனு நின்னு பிரேமிஸ்டுன்னானு” என்று சொல்லியதும் நிகழ்ச்சியில் ஆரவாரம் கிளம்பியது.