வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

50 வருஷமா என்னோட சூப்பர் ஸ்டார் பட்டத்தை எவனும் தொட முடியல.. இந்தியளவில் ஹீரோக்கள் கத்துக்க வேண்டிய பழக்கங்கள்.!

இந்திய சினிமாவில் 73 வயது ஒரு நடிகர் ஹீரோவாக நடிப்பது அதிக சம்பளம் வாங்குவது என்பது நம் ரஜினிகாந்த மட்டும் தான். இதனாலே மற்ற மொழி ஹீரோக்கள் வரை இதை பார்த்தாலே பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்து வருகிறார். இது எளிதான விஷயம் அல்ல இவர் கடைபிடிக்கும் விஷயங்கள் எந்த ஹீரோவும் செய்ததில்லை அதுதான் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

எளிமையான நடிகர் : ரஜினி கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர் 60 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு பத்திரிக்கையில் வேலை செய்து தற்பொழுது 250 கோடி சம்பளம் வாங்குகிறார் இந்த வயதில். ஆனால் இன்று வரை அவரிடம் மாறாதது அவரது எளிமை ஆரம்பம் முதல் இதை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. உடல் மொழியில் ஸ்டைலாக காட்டுவார் ஆனால் உடை விஷயத்தில் எளிமையை மட்டுமே விரும்புவார் இதுதான் ரஜினி.

தலைக்கனம் இல்லாத நடிகர் : ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தனது குணங்களை மாற்றியதே இல்லை ரஜினி. தன்னுடன் நடிக்கும் சின்ன நடிகர்கள் மற்றும் தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பது சமமாக நடத்துவது, அவர்களுடன் உட்கார்ந்து சகஜமாக பேசுவது. இதனால் சூப்பர் ஸ்டார் என்ற தலைக்கனத்தை ஒரு இடத்தில் கூட அவர் காட்டியதே இல்லை.

Also Read :ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என சொன்ன காட்டு ராஜா.. உண்மையைப் போட்டு உடைத்த நக்கீரன்

நானும் ஒரு சாதாரண நடிகன் தான் : ரஜினி தனக்கான ஷாட் முடிந்ததும் அங்கேயே உட்கார்ந்து மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியை உட்கார்ந்து கவனிப்பார். அதிகபட்சமாக கேரவன் பயன்படுத்துவதை தவிர்ப்பார். உடை மாற்றுவதை கூட சகஜமாக கூட்டத்தில் இருந்து கொண்டே மாற்றுவார். இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததே இல்லை. தன்னை ஒரு புது நடிகனாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தனது வேலையை செய்து வருகிறார்.

மற்றவர்களை மதிப்பது : ரஜினியிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் அவர் எல்லோரிடமும் சேர்ந்து அரட்டை அடிப்பார், ஜோக் அடிப்பார் ரொம்ப சகஜமான முறையில் பழகுவார். ஆனால் மற்றவர்கள் வேறொரு நபர்களை அவர்கள் இல்லாத பொழுது பேசினால் அந்த இடத்தை விட்டு சத்தம் இல்லாமல் நழுவி விடுவார். காரணம் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் பொழுது தான் அங்கு இருந்ததை நினைத்து வருத்தப்படுவார்கள், அதனால் அதை தவிர்த்து விடுவார்.

இப்படி இன்னும் பல விஷயங்களை ரஜினிக்கு சொல்லிக் கொண்டே போகலாம். இது வேற எந்த நடிகனுக்கும் பொருந்தாது. முக்கியமாக எம்ஜிஆர், சிவாஜி அதற்கடுத்து ரஜினி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருவது முக்கியமான ஒரு விஷயம். இவை எல்லாம் சேர்ந்துதான் தமது 73 வது வயதிலும் சூப்பர் ஸ்டார் ஆக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இந்திய அளவில் இருந்து வருகிறார். இளம் நடிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இன்றும் நடித்து வருகிறார்.

Also Read : பைத்தியக்கார பட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்.. 1000 படத்திற்கும் மேல் நடித்த ஒரே நடிகை

- Advertisement -spot_img

Trending News