புதன்கிழமை, ஜனவரி 22, 2025

த்ரிஷாவும் இல்ல கீர்த்தியும் இல்ல, புது ரூட்டை பிடித்த விஜய்.. தளபதி 69 படத்தின் அப்டேட்

Thalapathy 69 Movie Update: திருவிழா மாதிரி எந்த விழாவை கொண்டாடுறாங்களோ இல்லையோ, நடிகர்களின் பிரம்மாண்டமான படங்களை ஆரவாரத்துடன் கொண்டாடும் அளவிற்கு சினிமாவின் மோகம் அதிகரித்துவிட்டது. அதிலும் ரசிகர்கள் அவர்களுடைய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது தான் எங்களுக்கு தீபாவளி என்று பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடும் அளவிற்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்த வகையில் இதற்கெல்லாம் உச்சகட்ட நாயகனாக இங்கே ஆட்டம் ஆடுவது தளபதியின் படங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட விஜய்யின் படத்திற்கு இவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், மற்ற ரசிகர்களும் கொண்டாடும் அளவிற்கு மாஸ் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட இவர் கடைசியாக நடிக்கப் போகும் தளபதி 69 படத்துடன் சினிமாவிற்கு பிரேக் விட்டு விடுவேன் என்று கூறிய நிலையில் அனைவருமே கொஞ்சம் அப்செட்டில் தான் இருக்கிறார்கள்.

தளபதி 69 படத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய்

இருந்தாலும் அரசியலுக்கு போகப் போகிறார் என்ற ஒரு காரணத்திற்காக கொஞ்சம் மனதை தேத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இதனை அடுத்து நடிக்கப் போகும் தளபதி 69 படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்ப வந்த தகவலின் படி தளபதி 69 படத்தை இயக்கப் போவது இயக்குனர் எச் வினோத். இவர் எந்த நேரத்தில் யாருக்கு வெற்றியை கொடுப்பார் என்று யூகிக்கவே முடியாது. ஏனென்றால் இதுவரை இவர் எடுத்த படங்கள் ஏற்றம் இறக்கமாகத்தான் வெற்றியை பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது விஜய் கடைசியாக நடிக்க போகும் தளபதி 69 படத்தை எப்படி கொண்டு போவார் என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனாலும் அஜித் எந்த நம்பிக்கையில் இவருடன் தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்தார் என்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே எச் வினோத்துடன் கமிட் ஆகிவிட்டார். அத்துடன் இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அல்லது கீர்த்தி தான் இருப்பார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் விஜய்யின் வெற்றி நாயகிகள் மற்றும் ஃபேவரிட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது தளபதி 69 படத்தில் திரிஷாவும் இல்லை கீர்த்தியும் இல்லை என்று சொல்லி வேற ரூட்டுக்கு அடித்தளம் போட்டு விட்டார். அந்த வகையில் தற்போது வெற்றியை பார்க்க முடியாமல் துவண்டு போய் இருக்கும் நடிகை சமந்தாவுடன் தளபதி 69 படம் உருவாகப் போகிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கப் போகிறார். மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாக்க போகும் படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்கப் போகிறது.

எது எப்படியோ விஜய் கடைசியாக எடுத்து வைக்கப் போகும் படத்தில் நிச்சயம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி 69 படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்

Trending News