செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திரையில் மட்டும் தான் வில்லன்.. ரியலில் குடிப்பழக்கமே இல்லாத, அசத்தலான 5 நடிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை மக்களிடையே மாயபிம்பம் ஒன்று இருக்கிறது. சினிமாக்காரர்கள் என்றாலே தப்பானவர்கள் எதையும் செய்யக்கூடியவர்கள் என நினைப்பவர்களும் உண்டு. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் படி பல பேர் வாழ்ந்து இருக்கின்றனர். திரையில் வில்லனாக நடிப்பவர்கள் கூட நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக இருக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் மதுப்பழக்கம் இல்லாத 5 நாயகர்கள்,

நம்பியார்: நம்பியார் இப்போதைய வில்லன்களுக்கெல்லாம் வில்லாதி வில்லன் என்று சொல்லலாம். MGR, சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர் போன்ற அன்றைய ஹீரோக்களின் ஆஸ்தான வில்லன். திரையில் அத்தனை கொடுமைகள் செய்த நம்பியார், நிஜத்தில் குடிப்பழக்கம் இல்லாதவர். மேலும் இவர் தீவிர ஐயப்ப பக்தனும் கூட.

Also Read : நிஜ உலகில் ராமன் திரையுலகில் ராவணன்.. 1000-ம் படங்களுக்கு மேல் நடித்த அந்த பிரபலம் யார் தெரியுமா.?

அசோகன்: அசோகன் அன்றைய காலகட்டத்தின் பட்டதாரி நடிகர். அசோகன் சண்டையிட்டு மிரட்டியதை விட தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தால் நடுங்க வைத்தவர். நிறைய மதுகுடிக்கும் காட்சிகளில் நடித்த அசோகன், நிஜ வாழ்க்கையில் குடிப்பழக்கம் இல்லாதவர்.

ஜெய் சங்கர்: மாஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஒரு சாப்ட் ஹீரோவாக வலம் வந்தவர் ஜெய் சங்கர். இவர் நிறைய படங்கள் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்தவர். ஜெய் சங்கருக்கும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குடிபழக்கமே இல்லாமல் வாழ்ந்தவர்.

Also Read : ஜெய்சங்கரின் குணத்திற்கு அடிமையான 5 நடிகர்கள்.. ஜென்டில்மேனாக வாழ்ந்து சாதித்த கௌபாய் கிங்

சிவகுமார்: தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரையில் எந்த கிசுகிசுக்களும் இல்லாமல் இருந்த கதாநாயகன் சிவகுமார். பல மேடை பேச்சுக்களில் நன்னெறிகளை பற்றி பேசி வரும் சிவகுமார், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் குடிப்பழக்கம் இல்லாதவர்.

கல்யாண்குமார்: தமிழில் நெஞ்சில் ஊர் ஆலயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கல்யாண்குமார். தமிழ், கன்னடம், தெலுங்கு 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார். 90 களின் காலகட்டத்தில் நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் மது குடிக்கும் பழக்கம் இல்லாதவர்.

Also Read : 190 படங்களில் நடித்தும் பிரபலமாகாத சிவகுமார்.. ஒரே சீரியலில் நடித்து கார் வாங்கிய சம்பவம்

Trending News