ஸ்கிரிப்ட்-லையே இல்ல.. ஒரு முத்தத்துக்கு 8 படங்களுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதுகள்

deepika
deepika

பொதுவாக திரைப்படங்களில் வரும் முத்த காட்சிகளுக்கு அந்த நடிகர்களிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம். Force செய்து யாரையும் முத்தக்காட்சிகளில் நடிக்க கூடாது. ஆனால் இயக்குனர் ஸ்கிரிப்ட்-லையே முத்த காட்சிகளை வைத்திருக்க மாட்டார். இருப்பினும் ஒரு சில நடிகர்கள் ஒரு ஈர்ப்பில் சில நேரங்களில் முத்தம் கொடுத்து விடுவார்கள். அப்படி ஸ்கிரிப்ட்-ல் இல்லாமலே, ஒரு Flow-வில் முத்தம் கொடுத்த நடிகர்கள் யாரென்று பாக்கலாம்.

தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்: லிஸ்டில் முதலில் இருப்பதே, இந்த பாலிவுட் ஜோடி தான். கோலியோன் கி ரசலீலா, படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி படு பயங்கரமாக ஒர்கவுட் ஆகி இருக்கும். தொடர்ந்து அவர்கள் ராம் லீலா என்ற படத்திலும் நடித்தனர். இந்த படத்தில் வரும் அங் லகா தே பாடலில் பயங்கரமாக ரொமான்ஸ் செய்திருப்பார்கள். பாட்டின் இறுதியில் ஒரு முத்த காட்சி வரும். வீட்டில் ஆள் இருக்கும்போது பார்க்க கூட முடியாது. அப்பேற்பட்ட காட்சி, ஸ்கிரிப்ட்-லையே இல்லையாம். அவர்களாக ஒரு Flow-வில் இப்படி முத்தம் கொண்டனராம்.

டாம் கிரூஸ்- எமிலி பிளண்ட: எட்ஜ் ஒப் டுமோரோ படத்தில், இவர்களுக்கும் எப்படி ரொமான்ஸ் காட்சிகளை வைப்பது என்று குழம்பி கொண்டிருந்தாராம். இதை தொடர்ந்து நீங்கள் கஷ்டப்படாதீர்கள் நாங்களே செய்கிறோம் என்று, அவர்களாகவே முத்த காட்சிகளை அரங்கேற்றி விட்டனராம்.

வருண் தவான்- ப்ரணீதி சோப்ரா: 2016-ல் வெளியான டிஷூம் படத்தில், இடம்பெற்ற ஜெனீமன பாடலில் வந்த முத்த காட்சிகள் ஸ்கிரிப்ட்-லே இல்லையாம். அவர்களாக கொடுத்தனராம்.

டாம் கிரூஸ்-கெல்லி மைகேல்: டாப் கன் படத்தில், இவர்களுக்கும் நடக்கும் முத்த காட்சிகள் ஸ்கிரிப்ட்-லே இல்லை. ஆனால், டயலாக்கை மறந்ததால் செய்வதறியாது, சமாளிக்க முத்த காட்சியில் ஈடுபட்டுள்ளார் டாம் க்ரூஸ். இயக்குனருக்கும் காட்சி பிடிக்க, அதை அப்படியே படத்தில் வைத்து விட்டனர்.

ஜெனிஃபர் லாரென்ஸ்-எமி ஆடம்ஸ்: அமெரிக்கன் ஹஸ்ஸில் படத்தில், இவர்களுக்குள் இருக்கும் முத்த காட்சிகள் ஸ்கிரிப்ட்- இல்லை என்று அத படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பில் சட்டென்று முத்தம் கொடுத்திவிட்டார்களாம்.

லாஸ்ட் இந்த ட்ரான்ஸ்லயேஷன்: ஆஸ்கார் விருது வென்ற இந்த படத்தில் கிளைமாக்ஸ் ல் வரும் முத்த காட்சிகளை பற்றி இயக்குனர் யோசித்து கூட பார்க்கவில்லையாம். ஆனால் அவர்களுக்குள் முத்தங்களை பரிமாறி ஆஸ்கார் விருதுகள் வரை வாங்கி விட்டனர்.

கிறிஸ் ப்ராட்- ப்ரைஸ் டல்லாஸ்: ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் வரும் இவர்களைமறக்க முடியுமா. இவர்கள் நடித்த முத்த காட்சியும் ஸ்கிரிப்ட்-ல் இல்லை. ஆனால் ரசிகர்களுக்காகவும், இயக்குனரை மகிழ்விப்பதற்காகவும் இருவரும் திடீரென டேக் இல் முத்தம் கொடுத்து விட்டனராம். இதில் எந்த காதலும் இல்லை. நடிப்பு மீது இருந்த ஆத்மார்த்தம் மட்டுமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மார்க் ஹாமிஸ்-கேரி பிஷர்: ஸ்டார் வார்ஸில் வரும் உணர்ச்சி பூர்வமான ஒரு கட்சியில், நெத்தியில் முத்தமிடுவார் மார்க் ஹாமிஸ். அதும் எதேர்ச்சியாக நடந்த ஒன்று தானாம். அது அழகாக வந்திட படத்தில் வைக்க முடிவு செய்து விட்டனர்.

Advertisement Amazon Prime Banner