வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாருமே நினைத்து கூட பார்க்க முடியாத 5 வித்தியாசமான கதாபாத்திரம்.. ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது

Actress Ramya krishnan: ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது வரை நீலாம்பரி கேரக்டர் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பேசப்பட்டு வருகிறது. அதன் பின்னே இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், இவரை தவிர வேறு யாரு நடிச்சாலும் இந்த அளவிற்கு இருந்திருக்காது என்பதற்கு ஏற்ப தனித்துவமாக நடித்து விட்டார். அப்படி இவர் வித்தியாசமாக நடித்த கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

மேகி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் பஞ்சதந்திரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்தின் பெயர் மேகி. பஞ்சதந்திரம் படம் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபக வரக் கூடிய பெயர் இதுவாகத்தான் இருக்கும். இப்படத்தில் இவர் கமலுடன் சேர்ந்து பல அட்ராசிட்டிகளை காமெடியில் கலக்கியிருப்பார். ஒரு மாடர்ன் பெண்ணாகவும், அதே நேரத்தில் அந்த டைமண்டுக்கு ஆசைப்பட்டு செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் கைத்தட்டலை வாங்கி இருப்பார்.

Also read: 24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

நீலாம்பரி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரம்யா கிருஷ்ணன், ரஜினிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இதன் மூலம் அனைத்து இடங்களிலும் பிரபலமாகிவிட்டார். அத்துடன் இவரது பேச்சு, நடை, பாவனை அனைத்தும் சரியாக இருந்தது. இந்த கேரக்டருக்கு சரியானவர் இவர்தான் என்று சொல்லும் படி தற்போது வரை நிலைத்து நிற்கிறார்.

பாகுபலி: எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரம்யா கிருஷ்ணன், சிவகாமி தேவியாக அரசவையில் இருந்து ஆட்சி செய்து அதிகாரம் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை தத்துரூபமாக கொடுத்திருப்பார். முக்கால்வாசி இப்படத்தில் இவருடைய கண் அசைவின் மூலமே அனைத்து விஷயங்களையும் நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

குயின்: ரேஷ்மா கட்டாலாவால் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாற்று நாடகமாக மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரியஸில் நடித்திருக்கிறார். இந்தத் தொடரில் முன்னாள் அரசியல்வாதியை கற்பனை காட்சியாக கொண்டு சக்தி ஷேஷாத்ரியாக நடித்திருப்பார். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று வித்தியாசமான கேரக்டரில் சவாலாக நடித்திருக்கிறார். இந்தத் தொடரில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

அம்மன்: 60,70களில் பக்தி படமாகவும் சரி, சாமியாகவும் நம் கண் முன்னே காட்டிய நடிகை கே ஆர் விஜயா. இவருக்குப் பின் இந்த கேரக்டர் ரம்யா கிருஷ்ணனுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று சொல்வதற்கு ஏற்ப பல படங்களில் அம்மனாகவும் நமக்கு காட்சி அளித்திருக்கிறார். அப்படி இவர் நடித்த அம்மன் படங்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, அன்னை காளிகாம்பாள், நாகேஸ்வரி ராஜகாளியம்மன், பொட்டு அம்மன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி இவருக்கு கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடித்து மக்கள் மனதில் அதற்கான பிம்பத்தியை பதித்து விடுவார். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை தத்துரூபமாக நடிக்கக்கூடிய துணிச்சலான நடிகை இவராகத்தான் இருக்க முடியும்.

Also read: கோர்ட், கேஸ் என்று அலைய முடியாது.. படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட ரம்யா கிருஷ்ணன்

Trending News