பிக்பாஸ் ராஜு, தான் செய்த செயலுக்கு மனம் வருந்தி ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். விஜய் டிவியின் சீரியல்களின் மூலம் பிரபலமான ராஜு, அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கலகலப்பான, காமெடி கலந்த கிண்டல் பேச்சினால் டைட்டில் வின்னர் ஆனார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜு வீட்ல பார்டி, பிக்பாஸ் ஜோடிகள் 2 போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது.
அதில் பிரியங்காவுடன் ராஜு சிறப்பு விருந்தினர்களாக வந்த பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர், தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனா, பிரம்மாண்ட படங்களை இயக்கும் ராஜமௌலி ஆகியோருடன் கலகலப்பாக கலந்துரையாடினார்.
அப்போது ரன்பீர் கபூருக்கு ராஜு தமிழ் சொல்லித் தருவதாக கூறி சென்னை, மதுரை, கோவை போன்ற தமிழ் பேச்சுகளை அவருக்கு சொல்லிக் கொடுத்தார். சென்னையில் உள்ளவர்கள் முகத்தை எப்போதும் சீரியசாக வைத்துக் கொண்டே எரிச்சலாகவே இருப்பார்கள்.
மதுரையில் உள்ளவர்கள் குடித்துவிட்டு பேசுவது போலவே பேசுவார்கள் என்று அவருக்குத் தமிழ் சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். ஊருக்கு வந்த ஒருத்தரிடம் உன்னுடைய ஊரின் கலாச்சாரத்தை இப்படி தான் சொல்லிக் கொடுப்பாயா!.
Also Read: தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ராஜு.. செம்ம கேரக்டர் ஆச்சே!
சென்னைக்கு நீ பிழைக்க வந்துட்டு, சென்னை மக்களை இப்படித்தான் அசிங்கப்படுத்துவாயா என இவரது நிகழ்ச்சியை பார்த்தபிறகு சோஷியல் மீடியாவில் ராஜுவை வறுத்தெடுக்கின்றனர்.
இதன்பிறகு ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரன்பீர் கபூருக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்கொடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சனம் எழுந்ததை படித்தேன். நகைச்சுவையாக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். எரிச்சல் அடைய வேண்டாம். மன்னிக்கவும்’ என்று மெட்ராஸ் என டேக் செய்து கையெடுத்துக் கும்பிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Also Read: உங்க முகத்துல இதுதான் ஸ்பெஷல்.. பிக் பாஸ் ராஜீவை கூப்பிட்டு பாராட்டிய விஜய்