ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விக்ரம் படத்துக்கு மட்டுமில்ல ரஜினி படத்துக்கே அந்த நிலைமைதான்.. நட்பால் காப்பாற்றப்பட்ட படம்

Rajini and Vikram: முந்தைய காலங்களில் படங்கள் ரிலீஸானால் அப்படத்தின் லாபம் அனைத்தும் திரையரங்குகளில் வசூல் ஆவதை மட்டுமே வைத்து நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போதைய படங்கள் அனைத்துமே திரையரங்களையும் தாண்டி ஓடிடி தளங்கள் மற்றும் சேட்டிலைட் மூலம் விற்கப்படும் வியாபாரத்தை பொருத்தும் லாபத்தில் கல்லாகட்டி வருகிறார்கள்.

அதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாத வகையில் ஏதாவது ஒரு விதத்தில் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்து விடுகிறது. அதிலும் ஓடிடி நிறுவனங்கள் அறிமுகமான நேரத்தில் பெரிய ஹீரோ நடித்த படங்களை மட்டுமே அதிக அளவில் பணத்தை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் போகப் போக அப்படி வாங்கும் பெரிய ஹீரோக்கள் படங்கள் பெருசாக எடுபடாமல் போய்விட்டது.

இதனால் பல ஓடிடி நிறுவனங்கள் இனிமேலும் இப்படி நம்பி ஏமாறக்கூடாது என்று தற்போது ரொம்பவே உஷாராகி விட்டார்கள். அதனால் இப்போது அதிகமான பணத்தை கொடுத்து படங்களை வாங்க முன் வரவில்லை. இதனால் தான் விக்ரம் நடிப்பில் உருவாகிய தங்கலான் படம் வியாபாரம் ஆகாமல் அப்படியே கிணற்றில்ட போடப்பட்ட கல்லாக இருக்கிறது.

Also read: உன்ன நம்புனதுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட.. மஞ்சுமல் பாய்ஸால் மகள் மீது கடுப்பில் ரஜினி

இதனால் இப்படத்தை இயக்கிய பா ரஞ்சித் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு வருகிறார். மேலும் விக்ரமும் இப்படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணி விட்டால் இழந்த மார்க்கெட்டை மறுபடியும் பிடிக்கலாம் என்று கட்டி வைத்திருந்த கனவு கோட்டை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி வருகிறது. இந்த கெதி விக்ரமுக்கு மட்டுமில்ல சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படத்திற்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. அதாவது இப்படத்தின் டிஜிட்டல் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கு யாருமில்லை. அதனால் விலை போகாமலே இருந்தது. பிறகு வேறு வழி இல்லாமல் ரஜினியுடன் இருந்த நட்பின் பழக்கத்தால் மட்டுமே சன் டிவி நிறுவனம் அந்த படத்தை வாங்கினார்கள்.

முழுக்க முழுக்க லால் சலாம் படம் காப்பாற்றப்பட்டதற்கு கலாநிதி மாறன் ரஜினி மீது வைத்திருந்த நட்பு மட்டுமே காரணம். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. அதாவது சின்ன பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு முன் வருகிறார்கள். ஏனென்றால் அந்தப் படத்திற்கு பெருசாக பணத்தை செலவழிக்க வேண்டாம். அதே நேரத்தில் அப்படிப்பட்ட சின்ன படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

Also read: சாட்டை எடுத்து நாட்டை திருத்து.. ரஜினி அஜித் செய்யாததை செய்து காட்டிய விஜய்

Trending News