வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தலைவருக்கான தகுதி இல்ல, வறுத்தெடுத்த போட்டியாளர்.. அமைதியாக வேடிக்கை பார்த்த கமல்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று கமல் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அன்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபரொருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிக் மற்றும் அபினை இருவரை எலிமினேட் செய்து டபுள் எவிக்சன் என கமல் அதிரடி திருப்பத்தை அறிவிக்க உள்ளார். அத்துடன் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் உலகநாயகன் கமலஹாசன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இடம் இந்த வார கேப்டனாக செயல்பட்ட வனிதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் எனக் கேட்கிறார்.

அதற்கு வீட்டில் இருப்பவர்கள் சற்றும் அசராமல் வனிதாவிற்கு கேவலமான மதிப்பெண்களை கொடுத்து வறுத்தெடுத்து விட்டனர் .அதிலும் குறிப்பாக இன்று எலிமினேட் ஆக உள்ள ஷாரிக், ‘மதிப்பெண் கொடுக்கணும் என்கின்ற உடன்பாடு சுத்தமாகவே இல்லை’ என்றும், ‘அவங்களுக்கு மார்க்போட ஒன்றுமே இல்லை’ என்று பாலாவும், ‘இந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை வனிதாவிற்கு தெரியவில்லை’ என்று அபிராமியும், ‘கேமின் கேமை கிடப்பதே கேமாக வனிதா வைத்திருக்கிறார்’ என நிரூப் தனது கருத்தாக முன் வைத்தனர்.

மேலும் ஜூலி, வனிதா தன்னுடைய பொறுப்பை கொஞ்சம் கூட செய்யவில்லை என  கழுவி ஊற்றினார். மேலும் சுரு,தி வனிதாவின் பாசிட்டிவ் சைடு பத்தி பேசல, பெருசா பாசிட்டிவா சொல்றதுக்கு அவங்க கிட்ட ஒண்ணுமே இல்ல என்று கூறி வனிதாவின் மூக்கை உடைத்தார்.

இவ்வாறு வீட்டில் இருக்கும் அனைவரும் ஒருமித்த கருத்தாக கமல் முன்பு வனிதாவின் கேப்டன்ஷிப் பற்றி படு கேவலமாக கருத்து தெரிவித்தனர். அத்துடன் பத்து மதிப்பெண்ணில் ஒருத்தர் கூட ஐந்துக்கு மேல் தாண்டாமல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஐந்து குறைவாகவே மதிப்பெண்களை வனிதாவிற்கு வழங்கி அசிங்கப்படுத்தி விட்டனர்.

இருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத வனிதா, அவர்கள் வாயை அடைக்கும்படி கமல் முன்பே வாதிட்டு, நான் இப்படி தான் என்பதை காட்டப் போகிறார். இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த தரமான சம்பவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

Trending News