அவசரத்தால் எதிர்நீச்சலில் கோட்டை விட்ட ஜீவானந்தம்.. சுவாரசியமே இல்லாமல் குணசேகரன் போட்ட எண்டு கார்டு

gunasekaran
gunasekaran

Ethirneechal: 2022 பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலை சுபம் போட்டு முடித்து வைத்தார் ஜீவானந்தம். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலை பெண்கள் மட்டும் இல்லை, நிறைய ஆண்களும் பார்த்தது கொண்டாடினார்கள். திடீரென இந்த சீரியலை முடித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

டிஆர்பி இல் கலக்கிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலை சன் டிவியின் தலைமை சீக்கிரம் முடித்து வைக்குமாறு கட்டளை போட்டது. அதனால் குடும்பப் பெண்கள் முன்னேறுவதை காட்டாமல், திடீரென அவசரமாய் இயக்குனர் ஜீவானந்தம் அதற்கு எண்டு கார்டு போட்டு விட்டனர்.

குணசேகரன் கர்வம் குறையாமல் திருந்துவது போலவும், வீட்டு மருமகள் அனைவரும் முன்னேறுவதை, ஸ்லைடு ஷோ வில் காட்டி முடித்து விட்டனர். குடும்ப மருமகள்கள் அனைவரும் மிகவும் மாடர்னாக இறுதியில் வருவது போல காட்டிய பின் சுபம் போட்டு விட்டார் ஜீவானந்தம்.

சுவாரசியமே இல்லாமல் குணசேகரன் போட்ட எண்டு கார்டு

இந்த குணசேகரன் வேஷ்டி சட்டை கட்டி இருக்கிறான் ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கட்டிலும் என்னை போல் ஆயிரம் குணசேகரன் வருவான். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி இருப்பான். அவர்களையெல்லாம் தாண்டி வெற்றி அடையுங்கள் என தனக்கு உண்டான மிடுக்கில் கர்வம் குறையாமல் பேசிவிட்டு ஜெயில் செல்கிறார் குணசேகரன்.

குணசேகரன் தங்கை ஆதிரையின் கதை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோல் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணிக்கு கிளைமாக்ஸ் காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குணசேகரனின் பரம எதிரியான சாருபாலா குடும்பத்தை காட்டவில்லை. குணசேகரனின் தாய் விஷாலாட்சியை கிளைமாக்ஸ் கொண்டுவரவில்லை.

திருந்திய ஞானம் மற்றும் கதிர் இருவரும் மீண்டும் குணசேகரன் போல் ஆட்டம் போடுகின்றனர். அவர்களை நல்லவர்கள் போல் காட்டவில்லை. இப்படி பல குறைகளை வைத்து விட்டார் ஜீவானந்தம். ஏன் இப்படி திடீரென இந்த சீரியலை முடிக்க வேண்டும், எல்லாத்துக்கும் காரணம் அவசரம் தான். இதற்கெல்லாம் சன் டிவியின் மேலிடம் தான் பதில் சொல்ல வேண்டும்.

TRP-யில் சோடை போனதால் காணாமல் போன எதிர்நீச்சல்

Advertisement Amazon Prime Banner