விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் தான் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் வெளியாகிறது. ஆனால் துணிவு திரைப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதி கைப்பற்றி இருப்பதால் வாரிசு திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டு வருகிறது.
அதனால் தமிழ்நாட்டில் வசூல் பாதிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இப்படம் தெலுங்கில் வெளியாவதிலும் சிக்கலை சந்தித்தது. அந்த வகையில் கடந்த வாரம் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று வாரிசு திரைப்படம் குறித்து மறைமுகமாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர்.
Also read: தளபதி 67 மொத்த கதை இதுதான்.. லோகேஷ் LCU-வில் ரோலக்ஸ் என்கிற ஒத்த தலையை எடுக்க பத்து தல அவதாரம்
ஏனென்றால் தில் ராஜு சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் தெலுங்கில் வெளியாகும் நேரத்தில் நேரடி தெலுங்கு படங்களுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று ஒரு பிரச்சனையை கிளப்பினார். அதை மனதில் வைத்து தான் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதே பொங்கல் தினத்தில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்டவர்களின் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
அப்படி இருக்கும்போது தமிழ் நடிகரான விஜய்யின் படங்களுக்கு அங்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் எதிர்பார்த்தபடி வசூல் பெறாது என்று பலரும் வெளிப்படையாக பேசி வந்தனர். தற்போது அத்தனை சர்ச்சைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
Also read: விஜய் அப்பாவை பிரிய இவர்தான் முக்கிய காரணம்.. கண்மூடித்தனமாக நம்பியதால் காத்திருக்கும் ஆப்பு
அதன்படி இப்படத்தை தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் முக்கிய விநியோகஸ்தர்கள் வாங்கி இருக்கின்றனர். அதனால் திட்டமிட்டபடி தெலுங்கு திரை உலகில் இப்படம் எந்தவிதமான சிக்கலும் இன்றி வெளிவர இருக்கிறது. இதன் மூலம் இவ்வளவு நாள் வெளிவந்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களுக்கு சரி பாதி தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இங்கும் எந்த விதமான வசூல் பாதிப்பும் ஏற்படாது.
இப்படி வாரிசு படு ஜோராக களமிறங்க தயாராகி வருவது துணிவு படகுழுவை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளது. ஏனென்றால் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்னும் துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவில்லை. இதுவே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் எதற்கும் தயார் நிலையில் இருப்பது துணிவு படத்திற்கு பயத்தை காட்டி இருக்கிறது.
Also read: தூண்டிலை போட்டு திமிங்கிலத்தை பிடித்த ஆண்டவர்.. தளபதி 67ல் வச்சாங்க பாரு ட்விஸ்ட்