வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இப்போ சமந்தா, தமன்னா ஆட்டத்தை அப்போதே ஆடிய ராஜமாதா.. ரசிகர்களை இன்றுவரை கிறங்கடிக்கும் பாடல்

ஒரு காலகட்டத்தில் கவர்ச்சிக்கும், ஐட்டம் நடனத்திற்கும் என சில நடிகைகள் தனியாக வலம் வருவார்கள். அப்படி வந்தவர்கள் தான் சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி முதல் நமீதா வரை என பல ஐட்டம் டான்ஸ் நடிகைகள் உள்ளனர். ஆனால் தற்போது கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளே ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடிக்கின்றனர். அந்த வகையில்,தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் தான் சமந்தா மற்றும் தமன்னா.

இவர்கள் இருவரும் தற்போது வாய்ப்புகளை தக்கவைக்க ஐட்டம் டான்ஸ் ஆடி பல கோடிகளை பார்த்து வருகின்றனர். இதில் நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் வைரலான நிலையில், அவரது விவாகரத்துக்கு இந்த பாடல் தான் காரணம் என கூறப்பட்டது. மேலும் இப்பாடலின் மூலம் கிடைத்த புகழை வைத்து, இன்று ஹாலிவுட் வரை வாய்ப்புகளை தேடியுள்ளார்.

Also Read: விஜய் மீது அப்செட்டில் இருக்கும் சமந்தா.. பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததற்கு இதுதான் காரணம்

இவருக்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா ஹிந்தியில் வெளியான ஜி கர்தா என்ற வெப் தொடரில் படுக்கையறை காட்சியில் பலான வசனங்களை பேசி தனது இமேஜையே குறைத்துள்ளார் என்றே சொல்லலாம். இப்படி பல நடிகைகள் வாய்ப்புக்காக ஐட்டம் டான்ஸ் நடிகைகளாக மாறிய சம்பவங்கள் பல உண்டு. அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட நடிகை தான் ரம்யா கிருஷ்ணன்.

இவரது ஆரம்பக்கால படங்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் இருக்கும். அதே சமயத்தில் அம்மன் திரைப்படங்கள் என்றாலே இவரது முகம் தான் நமக்கு பரிச்சயம். அப்படி சாமி கெட்டப் முதல் மாமி கெட்டப் வரை நடித்த ரம்யா கிருஷ்ணன் ஐட்டம் டான்ஸும் ஆடி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வமணி இயக்கத்தில் வெளியாகி மெகாஹிட்டான படம் தான் கேப்டன் பிரபாகரன்.

Also Read:  பலான காட்சியால் பறிபோகும் வாய்ப்பு.. மார்க்கெட் போயிடுமோ என்ற பயத்தில் விளக்கம் கொடுத்த தமன்னா

விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இப்படத்தில் வெளியான அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில் ஸ்வர்ணலதா பாடிய ஆட்டமா தேரோட்டமா பாடல் பட்டித் தொட்டியெங்கும் இன்றுவரை பிரபலம் எனலாம். இப்பாடலில் மஞ்சள் நிற உடையில் ரம்யாகிருஷ்ணன் ஆடிய அந்த பாடல் அவரது கேரியரையே தூக்கி நிறுத்தியது.

ஆனால் ஆரம்பத்தில் இப்பாடலில் அவர், நான் ஆடமாட்டேன் என விடாப்பிடியாக அடம்பிடித்துள்ளார். அப்போது இயக்குனர் செல்வமணி கொடுத்த நம்பிக்கையால், அப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடி பல வாய்ப்புகளை பெற்றார். இதனிடையே இன்றைய சமந்தா, தமன்னாவுக்கே டப் கொடுக்கும் வகையில் அன்றைக்கே ரம்யாகிருஷ்ணன் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Also Read: ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

- Advertisement -spot_img

Trending News