வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் சமீபத்தில் அவர் அஜித்தை விட விஜய்க்கு தான் தமிழ்நாட்டில் அதிக மாஸ் இருக்கிறது என்று கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நொந்து போன தில் ராஜு யாரையும் கிண்டல் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை, சினிமாவில் நான் இன்னும் வளர வேண்டும் என்று கெஞ்சாத குறையாக விளக்கம் கொடுத்திருந்தார். அதன் பிறகு அந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்த நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை அவர் சீண்டி இருக்கிறார்.

Also read: அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தில் ராஜு விஜய் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசி இருந்தார்.

அதில் அவர் விஜய் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறியிருந்தார். அவரிடம் 30 நிமிடம் தான் நாங்கள் கதை சொன்னோம். உடனே அவர் இது நல்ல கதை பண்ணலாம் என்று சம்மதம் தெரிவித்துவிட்டார். மேலும் ரசிகர்கள் இது தமிழ் படமா, தெலுங்கு படமா என்று கேட்டு வருகின்றனர்.

Also read: அரசியல் மாநாட்டையே மிஞ்சிய ஆடியோ லான்ச்.. அரங்கத்தையே அலறவிட்ட விஜய்

ஆனால் இது முழுக்க முழுக்க குடும்ப படம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் ஏகப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் இருக்கிறது என செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றவாறு அம்மா சென்டிமென்ட் பாடலும் அனைவரையும் கவர்ந்தது. இதில் தயாரிப்பாளரும் அதை உறுதிப்படுத்தி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

ஆனால் வாரிசு மேடையில் அவர் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்று சொல்லும் வகையில் பேசி இருப்பது தான் இப்போது சோஷியல் மீடியாவை ரணகளம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய பேச்சால் கொந்தளித்துப்போன ரஜினி ரசிகர்கள் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும்தான். அது எங்கள் தலைவர் ஒருவர் தான். அவருடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also read: பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

Trending News