Seeman: அரசியல் கட்சிகளை பொறுத்த வரைக்கும் தனக்கு எதிரில் யார் இருக்கிறார் என்பதை பார்த்து போட்டி போட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். அதை தாண்டி உட்கட்சி பூசல் என்பது வந்து விட்டால் எதிரியை கையாள முடியாது.
தமிழ்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சி அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தற்போது அந்த லிஸ்டில் தான் சேர்ந்து விடுவார் போல நாம் தமிழர் கட்சி சீமான். தமிழகத்தை பொறுத்தவரை சமீப கால தேர்தல்களை பார்க்கும் பொழுது நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது.
அதே சமயத்தில் அடுத்த வருடம் விஜய் தேர்தல் களத்துக்கு வர இருப்பதால் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வாங்கி குறைய வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியில் உட்கட்சி பூசல் நடந்து கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்ததோடு ராஜினாமாவும் செய்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் அதிரடி முடிவு
கட்சி நிதிக்காக பிச்சை எடுத்துக் கூட நாங்கள் பணம் கொடுத்தோம், ஆனால் எங்கள் இளமைக்காலம் முடிந்தும் கட்சியின் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. யாரோ ஒரு தனி நபர் பாக்கியராஜ் என்பவரின் பெயரில் கட்சியின் ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கிறது.
இரண்டு லட்சம் ரூபாய் வாடகை வீடு, 15 வேலையாட்கள் என சீமான் செல்வ செழிப்பாக வாழ்கிறார். முதலில் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி தற்போது தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறது.
கட்சி நிமித்தம் கைது செய்யப்படுபவர்களுக்கான எந்த ஒரு உதவியும் கட்சியிலிருந்து கிடைப்பதில்லை. எங்கள் உறவினர்கள் வேறு கட்சியில் இருந்தால் அவர்களுடைய வீட்டு விசேஷத்திற்கு போகக்கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
ஆனால் சீமான் மட்டும் எல்லா விதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தேர்தலில் யாரை நிற்க வைக்க வேண்டும் என்று இவ்வளவு வருடமாக இருக்கும் தெரியவில்லை. கட்சியின் பழைய உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை.
இதற்கு முன்னாள் ராஜினாமா செய்த பழைய நிர்வாகிகளையும் நேரில் அழைத்து சீமான் பேச வேண்டும். இல்லை எனில் விரைவில் புதிய தமிழ் தேசிய இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்படும்.