சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

நாதக-வில் இருந்து விலகும் காளியம்மாள், வைரலாகும் போட்டோ.. விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு

Seeman: நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பதாக தெரிகிறது. இந்த கட்சியில் இருந்து ஏற்கனவே முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் விலகி விட்டார்கள்.

இந்த நிலைமையில் காளியம்மாளும் கட்சியிலிருந்து வெளியேறுகிறார் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது.

தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய போவதில்லை என காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு பகுதியில் நடக்கும் நிகழ்வு ஒன்றில் காளியம்மாள் பங்கேற்க இருக்கிறார்.

நாதக-வில் இருந்து விலகும் காளியம்மாள்

இந்த விழாவுக்கான பத்திரிக்கையில் காளியம்மாவின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதே பத்திரிக்கையில் கலந்து கொள்ளும் மற்ற திமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் பதவியோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு சீமான் பேசியதாக வெளியான ஆடியோவில் அவர் காளியம்மாளை பிசுரு என்று குறிப்பிட்டு இருப்பார். இதுதான் அவர் விலக காரணமாக இருக்கலாம்.

NTK TVK
NTK TVK

Trending News