ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லீ பட ஹீரோயின் இவர் தானாம்.. அல்லு அர்ஜுனுடன் ஜோடி போடும் நம்பர் நடிகை

Atlee : அட்லீ பாலிவுட்டில் சம்பவம் செய்த நிலையில் இப்போது டோலிவுட்டில் களமிறங்க இருக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் கோடி தாண்டி ஜவான் படம் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் அதே வெற்றி சூட்டுடன் அடுத்ததாக அல்லு அர்ஜுனின் படத்தை அட்லீ எடுக்க இருக்கிறார். அதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் அட்லீக்கு 60 கோடி தாண்டி சம்பளம் கொடுக்கப்பட உள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் திரிஷா

இந்த படத்தில் யார் கதாநாயகி என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார். இப்போது டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே திரிஷா தான் என்று ஃபிக்ஸ் ஆகிவிட்டது.

அதன்படி லியோ படத்திற்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். அதோடு கமலின் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் திரிஷா தான் கதாநாயகி. இந்த படத்திற்கு அவருக்கு கிட்டத்தட்ட 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

திரிஷாவுக்கு 15 கோடி சம்பளம்

இது தவிர கதாநாயகி முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் அட்லீ, அல்லு அர்ஜுன் காம்போவில் உருவாகும் படத்தில் திரிஷாவை படக்குழு புக் செய்துள்ளனர். இந்த படத்திற்கு எப்படியும் 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதோடு இப்போது படத்திற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாக இருக்கிறது. மேலும் உடனடியாகவே படப்பிடிப்பை அட்லீ தொடங்க இருக்கிறார்.

Trending News