Trending Memes: கடந்த சில தினங்களாக பிரியங்கா, மணிமேகலை இருவரின் பஞ்சாயத்து தான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருக்கும் பிரியங்காவால் மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார்.

இனி எப்போதும் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என கூறியதோடு பிரியங்காவின் முகத்திரையையும் கிழித்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கிளம்பி கொண்டிருக்கிறது.

அதேபோல் பிரியங்காவால் ஓரம் கட்டப்பட்ட தொகுப்பாளினிகளும் மறைமுகமாக தங்களுக்கு நடந்ததை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது மட்டுமல்லாமல் மணிமேகலைக்கு ஆதரவாக நெட்டிசன்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஒரு ஆர்மியே தொடங்கும் அளவுக்கு அவர்கள் சப்போர்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் கடந்த 15 வருடங்களாக மணிமேகலை தொகுப்பாளினியாக உள்ளார். இந்த இடத்தை அடைவதற்கு ஏகப்பட்ட சிரமங்களையும் சந்தித்துள்ளார்.

அதனால் விஜய் டிவி இல்லை என்றால் வேறு ஒரு சேனல். எங்கு போனாலும் அவர் பிழைத்துக் கொள்வார். ஆனால் பிரியங்கா அப்படி கிடையாது. அட்டை மாதிரி இங்கேயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்தால்தான் சோறு என குட் நைட் படத்தில் வரும் டயலாக்கை மீம்ஸ் ஆக போட்டு வைரஸ் செய்து வருகின்றனர்.

மேலும் குக் வித் கோமாளி இந்த சீசன் டைட்டில் வின்னரும் பிரியங்கா தான். இதிலிருந்தே விஜய் டிவியின் கேவலமான செயல் தெரிகிறது என மணிமேகலை ஆர்மியினர் பொங்கி வருகின்றனர். இதனால் அடுத்த சீசன் தொடருமா? குட்டு வெளிப்பட்டதால் விஜய் டிவியின் அடுத்த ட்ராமா என்ன? என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.


பிரியங்காவுக்கு ஆதரவாக விஜய் டிவி செய்த வேலை
- CWC 5 ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா.?
- என்ன பெரிய கெமிக்கல் ரியாக்ஷன்
- சம்பள பணம் எல்லாத்தையும் காலி பண்ணிட்ட, ஆவணி மாத ரகளை மீம்ஸ்