Naveen Patnaik: பாஜக மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்திருந்தாலும் உள்ளுக்குள் மிரண்டு போய் தான் கிடக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதது தான். மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் நம்பி தான் தற்போது பாஜக இருக்கிறது.
நவீன் பட்நாயக், நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு தான் தற்போது பாஜகவின் சோலியை உருட்டிக் கொண்டிருப்பது. தற்போது இந்த கூட்டணியில் இருந்து நவீன் பட்நாயக் ஜகா வாங்கியிருக்கிறார். பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் பிஜு ஜனதா தளம் பாஜகவுக்கு தான் ஆதரவு அதிகமாக தெரிவித்து வரும்.
இந்நிலையில் இந்த கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நவீன் பட்நாயக் கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட முக்கியமான முடிவை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில் இனிமேல் பாஜக கட்சிக்கு எந்த ஆதரவும் கிடையாது என சொல்லி இருக்கிறார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் எனவும் பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இனி எப்போதுமே பாஜக ஆட்சிக்கு ஆதரவு என்பது எங்களிடமிருந்து கிடைக்காது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் இனி ஒடிசா மக்களுக்கான நலன் சார்ந்த பிரச்சினைகளை பற்றி அதிகமாக குரல் எழுப்புவோம் என்றும் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்தும் வாங்கி கொடுப்போம் என்றும் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார்.
நிறைவேற போகும் காங்கிரசின் கனவு
ற்கனவே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பாம்பு என்று சுற்றிக் கொண்டிருக்கிறது பிஜேபி கட்சி. தமிழ்நாட்டில் தோற்று இருந்தாலும் பரவாயில்லை உட்கட்சி பூசல் உருவாகி கட்சியில் ரகசியம் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில் ஒடிசா மாநிலமும் ஜகா ஜகா வாங்கி விட்டாள், அதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுத்து விடுவார்களோ என்ற பயம் பாஜகவுக்கு வந்துவிட்டது.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் இது எல்லாம் சமத்தாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கிவிட வேண்டும் என்று அவர்களுடைய கனவு விரைவில் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.