புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஒடிஷா ரயில் விபத்தின்போது வந்த ஐடியா! இந்த டிவைஸ் இருந்திருந்தால் திருவள்ளூர் ரயில் விபத்து நடந்திருக்காது – மாணவர்கள்

ஒடிஷா ரயில் விபத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் அருகே நேற்று முன் தினம் இரவு நடந்த கவரைபேட்டை ரயில் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த டிவைஸ் இருந்திருந்தால், ரயில் விபத்து நடந்திருக்காது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்து

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் ஆந்திரம் மாநிலம் கூடுரை நோக்கி சென்று பாக்மதி எஸ்பிரஸ் ரயில் மீது ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது 11 ஆம் தேதி இரவு மோதியது. இதில், ரயில் பெட்டிகள் சிறதி, பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில், 93 இணைப்புகள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இவ்விபத்து தொடர்பாக திட்டமிட்டு நாச வேலை காரணமாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மீட்பு குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, விபத்து நடந்த இடத்திலிருந்து சிதறிக்கிடந்த பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, ரயில் தண்டவாள போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் உயிரிழப்புகள் இல்லாத நிலையில் இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து, தகவல் தொடர்பும் அதிகரித்துவிட்ட சூழலில் ஏன் இன்னும் பழையபடி சிக்னல் கோளாறு, ஓட்டுனரின் தவறு என்று குறை சொல்ல வேண்டும். இது மறுபடி நேராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு முக்கியம் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மாணவர் ஜெயவிஷ்ணுவின் புதிய கண்டுபிடிப்பு

இந்த நிலையில், இந்த டிவைஸ் இருந்திருந்தால் இவ்விபத்து நடந்திருக்காது என்று மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் ஜெயவிஷ்ணு கூறியதாவது: ’’நான் புதிய முயற்சியாக ரயில் விபத்து நடைபெறுவதை தடுப்பதற்காக, ரயில்வே பாயின்ட் மெஷின் ஸ்டேட்டஸ் மானிட்டர் என்ற சிஸ்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன். ரயில்வே பாயிண்ட் மெஷின் என்பது, டிராக்கை மாற்றும் ஒரு டிவைஸ். ரியல் டைமில் மானிட்டர் செய்து, அதை லோகோ மோட்டிவ்வுக்கு சிக்னலை பாஸ் செய்வேன். இது என்ன செய்யுமென்றால், இந்த டிவைஸ் இருந்திருந்தால், கோரமண்டல் ரயில் விபத்து, நேற்றைய விபத்தை தவிர்த்திருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்தின் போது தோன்றிய ஐடியா!

மேலும், ’’டிராக்கை மாற்றும் மெஷின் என்பதால் இதுகுறித்து முன்னமே லோகோ மோட்டிவ்க்கு தகவல் கொடுத்தால் அவர் முன்கூட்டியே கணித்திருக்கலாம்.. இது 3 கிமீ இருக்கும் போதே பாயிண்ட் சிக்னலை பாஸ் செய்திருக்கலாம். இது ஒரு ஸ்டேசனை எளிதில் கடக்க வழி, இது ஒருமுறை தகவலை பாஸ் செய்துவிட்டு அழியும், அடுத்து வரும் ரயிலுக்கு டிராக் சர்கியூட் 1 லிருந்து தகவல் தெரிவிக்கும். இது ரேடியோ பிரீக்வன்சியில் தகவல் கடத்தப்படும். இந்த பாயிண்ட் மெஷின் ஐடியா ஒடிஷா ரயில் விபத்தின்போது தோன்றியதாக’’ தெரிவித்துள்ளார்.

Trending News