Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒடியா சினிமா வரலாற்றில் முதன் முறையாக 10 கோடி வசூலித்த Bou Buttu Bhuta.. முழு விமர்சனம் இதோ!

ஒடியா சினிமா வரலாற்றில் முதன் முறையாக 10 கோடி வசூலித்த Bou Buttu Bhuta.. முழு விமர்சனம் இதோ!

Bou Buttu Bhuta: கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இருந்த கன்னட சினிமா உலகை கேஜிஎப் படம் தான் இந்திய அளவில் முன்னெடுத்து வந்தது. தற்போது அதே விஷயம் ஒடிசா மொழி சினிமா உலகிற்கு நடந்திருக்கிறது. ஒடியாவில் வெளியாகும் படங்களை […]

Bou Buttu Bhuta: கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இருந்த கன்னட சினிமா உலகை கேஜிஎப் படம் தான் இந்திய அளவில் முன்னெடுத்து வந்தது. தற்போது அதே விஷயம் ஒடிசா மொழி சினிமா உலகிற்கு நடந்திருக்கிறது.

ஒடியாவில் வெளியாகும் படங்களை அந்த மக்களே விரும்பி பார்ப்பதில்லை எனவும், ஒன்று இரண்டு நாட்கள் தியேட்டரில் ஓடினாலே பெரிய விஷயம் எனவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தாண்டி Bou Buttu Bhuta என்ற படம் முதல் முறையாக 10 கோடி வசூலித்து இருக்கிறது.

முழு விமர்சனம் இதோ!

அந்த படத்தின் முழு விமர்சனத்தை தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம். படத்தின் ஹீரோ புட்டு தன்னுடைய தாய் ரத்தினமாலாவுடன் கிராமத்தில் மீன் வளர்ப்பு வேலை செய்து பிழைத்து வருகிறார். அதே கிராமத்தில் இருக்கும் மருத்துவரின் மகள் ரிங்கு புட்டுவை காதலிக்கிறார்.

புட்டுவுக்கு இந்த தொழிலை எல்லாம் விட்டுவிட்டு வேறு எங்காவது போய் அதிகம் சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. அப்படி ஒரு சமயத்தில் புட்டு இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு வரும்போது அவரை ஜெகன்நாத் என்பவரின் ஆவி ஆட்கொள்கிறது.

டெல்லியில் நன்கு படித்து இந்த கிராமத்திற்கு வந்தவர் ஜெகன்நாத் இவரை ஒரு சில காரணங்களால் இந்த கிராமத்தினரே கொலை செய்து இருக்கின்றனர். அவருடைய ஆவி தான் தற்போது புட்டுவை ஆட்கொள்கிறது அதன் பின்னர் நடக்கும் மர்ம சம்பவங்கள் தான் படத்தின் முழு கதை.

திரைக்கதை வடிவமைப்பு அதற்கேற்ற மாதிரியான பின்னணி இசை தான் படத்திற்கு மிகப்பெரிய பாசிடிவ் என விமர்சகர்கள் கூறுகின்றனர். மேற்கு ஓடியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ராஜா திருவிழா சமயத்தில் ரிலீசான இந்த படம் தற்போது பெரிய அளவில் பேசும் பொருளாக இருக்கிறது.

இது போன்ற படங்கள் ஒடியாவில் ரிலீஸ் ஆகத் தொடங்கினால் கண்டிப்பாக வேறு மொழி படங்களை தேடி நாங்கள் போகவே மாட்டோம் என அங்குள்ள ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் மற்றும் திரில்லருடன் இருக்கும் இந்த படம் முடியும் பொழுது இரண்டாவது பாகம் விரைவில் என்ற பிள்ளையார் சுழியுடன் முடிந்திருக்கிறது. இந்த படத்தை ஜெகதீஷ் மித்ரா இயக்க அப்ரஜிதா, ஹர்ஷிதா, பூஷன், ஜெகநாத் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.