மம்மூட்டி,தனுஷ் என இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக் கலைஞர்கள் இருவரும் இணைந்துள்ள ‘ஓம்’படம் இன்று வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.பெரிய நட்சத்திரக் கூட்டணியை வைத்துக்கொண்டு வெறும் பிரம்மாண்டத்தை மட்டும் நம்பாமல்,காதல்,குடும்ப உறவுகள்,தலைமுறைகளைக் கடந்து தொடரும் உணர்வுகள் என அழுத்தமான கதையைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
கேரக்டர்களை வடிவமைத்த விதமும்,அவர்களுக்கு இடையேயான உறவுகளைத் திரையில் கொண்டு வந்த விதமும் படத்திற்குப் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
படத்தின் தொடக்கத்திலிருந்தே கதைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் திரைக்கதை,உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் கவனம் ஈர்க்கிறது.சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்களும் உணர்ச்சிகரமான தருணங்களும் பார்வையாளர்களைத் தொடர்ந்து படத்துடன் ஒன்ற வைக்கின்றன.
தேவையற்ற கமர்ஷியல் அம்சங்களைத் தவிர்த்து,கதைக்கும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது இயக்குநரின் சிறப்பான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
நடிப்பைப் பொறுத்தவரை,மம்மூட்டி பர்மா கார்த்திகேயன் என்னும் செம்மரக் கடத்தல் தாதாவாக நடித்திருக்கிறார்.தனது அனுபவத்தாலும் கம்பீரமான நடிப்பாலும் ஒவ்வொரு காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.குறிப்பாக, தனுஷுடன் அவர் இணைந்து வரும் காட்சிகளில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் வழக்கம்போல தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.ஏஜென்ட் பழனிவேலாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
சாய் பல்லவியைப் பொறுத்தவரை,தனுஷுக்கு இணையாக இந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.முடியை வெட்டிக்கொண்டு காவல்துறை அதிகாரியாக அதிரடி காட்டியிருக்கும் அவர், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்.தனுஷுடனான அவரது கெமிஸ்ட்ரியும் படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் இசை படத்திற்கு இன்னொரு பலம்.ஏற்கெனவே ‘வீழா வீரா’பாடல் ஹிட்டாகியிருக்கும் நிலையில்,மற்ற பாடல்களும் கதையின் ஓட்டத்தோடு பொருந்திப் பயணிக்கின்றன.பின்னணி இசை முக்கியமான காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
கே.எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற அழகியலைக் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில், இயக்குநரின் நேர்த்தியான திரைக்கதை, மம்மூட்டி,தனுஷ்,சாய் பல்லவி ஆகியோரின் சிறப்பான நடிப்பு, சாய் அப்யங்கரின் இசை என அனைத்தும் இணைந்து ‘ஓம்’படத்தை ரசிகர்கள் ரசிக்கக்கூடிய ஒரு படைப்பாக மாற்றியிருக்கின்றன.




