புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

போட்டியாளர்களாக களம் இறங்க உள்ள திரை பிரபலங்கள்.. விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4

மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சியானது நாளை தொடங்க இருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களிலும் இரவு 9.30 மணிக்கு  இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் போட்டியாளர்களாகவும் கோமாளிகளாகவும் இந்நிகழ்ச்சியில் களம் இறக்கப்படுவர். அதிலும் ஏற்கனவே கோமாளிகளாக இருந்தவர்களை ஓரம் கட்டிவிட்டனர். தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர்களை கோமாளிகளாக இறக்கியுள்ளனர். புதிதாக களம் இறங்கிய கோமாளிகளின் லிஸ்ட் ஆனது வெளியாகி பயங்கர ட்ரெண்ட் ஆனது.

Also Read: மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

தற்பொழுது புதிதாக களமிறங்க உள்ள திரை பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம். அந்த வகையில் முதலாவதாக நடிகை விசித்ரா ரஜினி நடித்த முத்து படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆண்ட்ரியான் நௌரிகாட் ரஜினி முருகன் படத்தில் சூரி உடன் காமெடி சீனில் நடித்ததன் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் ஆவார். வி ஜே விஷால் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்னும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஆனார்.

திரைப்பட நடிகையான ஷெரின் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார். நாய் சேகர் படத்தின் இயக்குனர் ஆன கிஷோர் ராஜ்குமார் குக் வித் கோமாளியில் சீசன் 4 இல் பங்கேற்க உள்ளார். இவர்களைத் தொடர்ந்து ராஜ் அய்யப்பா வலிமை படத்தில் அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

Also Read: பிக் பாஸ் சீசன் 6 ஒட்டு மொத்த சர்ச்சைகளின் லிஸ்ட்.. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியவருக்கு டிராபியா.?

இந்நிலையில் ஸ்ருஷ்டி டாங்கே, காளியன் உள்ளிட்டோரும் போட்டியாளர்களாக பங்கு பெற உள்ளனர். தொடர்ந்து 3 சீசனிலும் கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி தற்பொழுது போட்டியாளராக சீசன் 4 இல் பங்கு பெற உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்று சீசன்களிலும் தலைமை தாங்கிய சமையல் கலைஞர் நிபுணரான செஃப்  தாமு மற்றும் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி சீசன் 4  இல் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது அதில் போட்டியாளர்களாக பங்கு பெறும் திரை பிரபலங்களின் பட்டியல் ஆனது வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: ஜெயிக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது.. பிக் பாஸில் சிவின் வெளியேறியதற்கு கமல் கூறிய காரணம்

Trending News