திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விராட் கோலியை பார்த்தாலே எங்களுக்கு ரொம்ப நடுங்குது.. வெளிப்படையாய் சொல்லி சரண்டர் ஆன 11 பேர்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான். பொதுவாக பங்களாதேஷ் வீரர்கள் மற்ற அணியை எரிச்சல் அடைய செய்யக்கூடிய குணம் கொண்டவர்கள்.

பங்களாதேஷ் அணியில் நல்ல அனுபவமிக்க வீரர்கள் மற்றும் நன்றாக விளையாடக்கூடிய திறமை இருந்தாலும் கூட அவர்கள் நடக்கும் விதம் உலக கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்து விடும். அப்படி அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் எல்லோரும் மெச்சூரிட்டி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.

ஒருமுறை இந்தியா-பங்களாதேஷ் போட்டி நடக்கும் போது பங்களாதேஷ் ரசிகர்கள் தோனியின் தலையை வெட்டி கையில் வைத்திருப்பது போல் போஸ்டர்களை கொண்டு வந்து அவமதிப்பு செய்தனர். இதை பங்களாதேஷ் வீரர்களும் ரசித்து பார்த்து ஆரவாரம் செய்தனர்.

அந்த அணியின் முஸ்தஃபீர் ராஹிம் ஒரு முறை இந்தியா தோற்ற போட்டிக்கு இவர்களுக்கு இதைவிட மோசமான தோல்வி வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்து அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார். அதே போல் பங்களாதேஷ் வீரர்கள் எல்லா அணி வீரர்களையும் வெறுப்படைய செய்வது போல் நாகினி நடனம் வேறு ஆடுவார்கள்.

இப்பொழுது அந்த அணி வீரர்கள் விராட் கோலியை மட்டும் ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது அவரை வெறுப்பேற்றினால் அது தங்களுக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக ரஹீம், பலமுறை நாங்கள் விராட் கோலியை வெறுப்பேற்றி வாங்கி கட்டி உள்ளோம் என்று சரண்டர் ஆகி விட்டார்.

கோலியை வெறுப்பேற்றினால் உத்வேகம் அடைந்து எதிரணிகளை பந்தாடி விடுவார். இப்படி பல அணிகளுக்கு எதிராக நடந்திருக்கிறது. போட்டிகளை தோற்றால் அவர் மனநிலை வேறு மாதிரி மாறிவிடும், அதை அவர் விரும்ப மாட்டார். களத்தில் மிகவும் ஆப்கிரோஷமான மனநிலையிலேயே இருப்பார் என பங்களாதேஷ் வீரர்கள் கோலியை பற்றி புட்டு புட்டு வைக்கின்றனர்.

Trending News