Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவிற்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் முடிந்த நிலையில் திருமண நாளை கொண்டாட போகிறார்கள். அதற்காக வீட்டிலேயே ஒரு பிரம்மாண்டமான செட்டப்பை போட்டு மீனாவிற்கு முத்து சர்ப்ரைஸ் கொடுத்து விடுகிறார். அத்துடன் மீனாவிற்காக ஒரு மோதிரம் வாங்கி கையில் போட்டு விடுகிறார்.
பிறகு சுருதி கேக் ஆர்டர் பண்ணிய நிலையில் அதை வெட்டி செலிப்ரேஷன் பண்ண போகிறார்கள். இப்படி ஒட்டுமொத்த குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் முத்து மீனா திருமண நாளில் வேட்டு வைக்கும் விதமாக லோக்கல் ரவுடி சிட்டி பிளான் பண்ணிவிட்டார். அதாவது ஜெயிலில் இருந்து வெளிவரும் சிட்டியை பார்ப்பதற்கு மீனாவின் தம்பி சத்யா போகிறார்.
முத்துவை சாந்தப்படுத்திய மீனா
போனதும் சத்யாவை பார்த்து இன்னைக்கு உங்க அக்காவுடைய திருமண நாள் ஆச்சு. பிறகு நீ ஏன் அங்கே போகாமல் இங்கே வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு சத்தியா நான் போனாலும் அங்கே முத்து தேவையில்லாமல் ஏதாவது பிரச்சினை பண்ணுவார். அதனால் தான் நான் அங்கு போகவில்லை என்று கூறுகிறார்.
உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதாவது பிரச்சினையை உண்டாக்க நினைத்த சிட்டி, சத்யாவிடம் பணத்தை கொடுத்து அவர்களுக்கு தேவையான துணியை வாங்கிட்டு போ என்று அனுப்பி வைக்கிறார். பக்கத்தில் இருந்த ஒருவர் உனக்கு தான் மீனா மூத்து என்றால் பிடிக்காது. பிறகு ஏன் பணத்தை கொடுத்து இந்த மாதிரி சத்யாவை அனுப்பி வைத்திருக்கிறார் என்று கேட்கிறார்.
அதற்கு அந்த சிட்டி, சத்யா கெத்தா அங்கே போய் நிற்பான். இது பிடிக்காத முத்து அங்கே பிரச்சினை பண்ணி வீட்டில் நடக்கும் நல்ல விஷயத்தில் யாரும் சந்தோஷப்பட முடியாமல் முத்து செய்த காரியத்தால் அவஸ்தைப்படுவார்கள். அதனால் தான் நான் இப்படி ஒரு பிளானை சத்தியா மூலம் போட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்.
அதன்படி சத்யாவும் முத்து மீனாவிற்கு தேவையான துணியை வாங்கிட்டு முத்து வீட்டிற்கு போகிறார். அந்த நேரத்தில் கேக் கட் பண்ணும் போது சத்யா உள்ளே போகிறார். இவரைப் பார்த்ததும் முத்து கொஞ்சம் கோபப்படுகிறார். பிறகு மீனா அவர் கையை பிடித்து சமாதானப்படுத்துகிறார். ஆனால் அந்த லோக்கல் ரவுடி நினைத்தபடி எந்த பிரச்சனையும் இல்லாமல் புஸ்வானமாக போகப் போகிறது.
பிறகு முத்து கோபப்பட்டு இருப்பதை பார்த்த பாட்டி என்ன பிரச்சனை என்று தனியாக கூப்பிட்டு கேட்க போகிறார். அப்பொழுது பாட்டியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடலாம் என்று சொல்லும்பொழுது மீனா, தம்பி பண்ணுன திருட்டு வேலையை தெரிந்து கொள்ள போகிறார். இதன் பிறகு சத்யாவை கண்டித்து திருத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.