ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நாங்கள் ஒண்ணும் நயன்தாராவுக்கு சலச்சவங்க இல்ல.. 3 படங்களுடன் கெத்து காட்டும் நடிகை

Actress Nayanthara: தன் அழகாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராய் வலம் வருபவர் நயன்தாரா. இந்நிலையில் இவருக்கு போட்டியாய் களம் இறங்கிய நடிகை ஒருவரை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

ரசிகர்களின் கனவு கன்னியாய், தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்டில் முதல் இடம் பிடித்தவர் நயன்தாரா. சமீபத்தில் திருமணம் ஆகிய பிறகு, சினிமாவில் சிறிது ஆர்வம் குறைந்து காணப்படுகிறார். அதைக் கொண்டு இவரின் மார்க்கெட்டும் கொஞ்சம் தள்ளி அடிக்கப்பட்டது.

Also Read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

அவ்வாறு மீண்டும் படம் நடிக்க ஆரம்பித்த நயன்தாராவுக்கு திரும்பும் பக்கமெல்லாம் கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. சரிவர எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்காத நிலையில், தற்போது கைவசம் ஒரே ஒரு படம் தான் வைத்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது அன்னபூரணி என்னும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பெயர் பிரச்சனையை பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், பெயரை மாற்றும் வேலையில் பட குழு இருந்து வருகிறது. ஆரம்பிக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலைமையில் நயன்தாரா இருந்து வருகிறார்.

Also Read: பிரபல நடிகர் மீது தீராத காதல்.. கணவரையும் இழந்த பாடகியின் சீக்ரட்டை உடைத்த பயில்வான்

இது ஒரு புறம் இருக்க, பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கும் படங்களை குறிவைத்து நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவ்வாறு இவர் மேற்கொண்ட கனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஃபர்ஹானா இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

டாப் ஹீரோயின்கள் யாரும் முயற்சிக்காக புது முயற்சியில் மேற்கொண்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார். உமன் சென்றிக் மூவிஸ் இல் 5 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதுபோன்ற படங்களை தன் கைவசம் வைத்துக்கொண்டு மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சிகளில் இருந்து வருகிறார். இவரின் இத்தகைய செயல்கள் நாங்கள் ஒண்ணும் நயன்தாராவுக்கு சலச்சவர்கள் இல்லை என நிரூபிக்கும் விதமாய் இருந்து வருகிறது.

Also Read: சத்தமே இல்லாமல் வேறு படத்தை எடுக்கும் அஜித்.. விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்

Trending News