வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சசிகுமார் கடனாளியாகி சீரழிந்த ஒரே படம்.. உறவினர் மரணத்தால் சினிமாவையே வெறுத்த பரிதாபம்

சமீபகாலமாக சினிமாவில் ஒரு போக்கு அதிகமாக நடந்து வருகிறது. அதாவது இயக்குநர்கள் தயாரிப்பாளராவது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பது, தயாரிப்பாளர்கள் நடிகராவது என புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள். அப்படி ஆரம்பத்தில் இயக்குனராக சசிகுமார் பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் தான் ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக சசிகுமார் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக வெளியான அயோத்தி படம் மட்டும் நேர்மையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் சசிகுமாருக்கு படங்களை தயாரிக்கும் ஆசை வந்தது. ஆனால் அந்த ஆசையால் அவர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டார். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் தாரை தப்பட்டை என்ற படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தை சசிகுமார் சொந்தமாக தயாரித்திருந்தார். தாரை தப்பட்டை படம் படுமோசமான தோல்வி அடைந்ததால் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் சசிகுமார் கடனாளியாக மாறிவிட்டார். மேலும் இந்த படத்திற்காக அவருடைய மேனேஜராக செயல்பட்டு வந்த சசிகுமாரின் நெருங்கிய உறவினரும் பணத்தை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் கடனை சமாளிக்க முடியாமல் சசிக்குமாரின் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த செய்தி கோடம்பாக்கத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலிருந்து சசிகுமார் இனிமேல் படத்தை தயாரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

ஆகையால் தற்போது படத்தில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் அயோத்தி படம் மூலம் சசிகுமாருக்கு சரியான கம்பேக் கொடுத்துள்ளது. சமீபத்தில் இப்படம் ஜி5 ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. சசிகுமார் நடிகராக இன்னும் பல படங்கள் கொடுக்க காத்திருக்கிறார்.

Trending News