Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

13 வருட பகை என்ன நடந்தது தெரியுமா.? தம்பியின் மனைவி இறப்புக்கு கூட வராத இளையராஜா.!

13 வருட பகை என்ன நடந்தது தெரியுமா.? தம்பியின் மனைவி இறப்புக்கு கூட வராத இளையராஜா.!

சினிமாவில் போட்டி, பொறாமை என்பது சகஜம் தான். அந்த வகையில் தமிழ் சினிமா பல ஹிட் படங்களை கொடுத்த அண்ணன், தம்பியின் பிரிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இவர்கள் பிரிவுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் இருவரும் அதைப் பற்றி […]

சினிமாவில் போட்டி, பொறாமை என்பது சகஜம் தான். அந்த வகையில் தமிழ் சினிமா பல ஹிட் படங்களை கொடுத்த அண்ணன், தம்பியின் பிரிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இவர்கள் பிரிவுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் இருவரும் அதைப் பற்றி பேசவே இல்லை.

பாவலர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இளையராஜா, கங்கை அமரன் இருவரும் 13 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் கங்கை அமரன் இயக்கம் அனைத்து படத்திலும் இளையராஜா தான் இசையமைப்பார்.

இவர்கள் காம்போவில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ஹிட்டு தான். இதற்கு எடுத்துக்காட்டாக கரகாட்டக்காரன் படத்தையே சொல்லலாம். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது இவர்களிடையே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் வரத்தொடங்கியது.

அந்த சண்டை பெரிய விரிசல் ஆக காரணமாக இருந்த படம் சின்னச் ராமசாமி பெரிய ராமசாமி. இப்படத்தின் தயாரிப்பின் போது இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் சந்திக்காமலும், பேசிக் கொள்ளாமலும் இருந்துள்ளனர்.

கங்கை அமரன் மனைவி இறப்புக்கு கூட வரவில்லை இளையராஜா என்ன காரணம் என்று கேட்டதற்கு அப்படி இப்படி என்று மழுப்பி விட்டாராம். தற்போது கங்கை அமரன் அண்ணன் இளையராஜா தான் என்னை வழிநடத்த வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இளையராஜா, கங்கை அமரன் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும் இவர்களது வாரிசுகள் எந்த மோதல்களும் இல்லாமல் பாசமாக இருந்து வந்தனர். அதேபோல் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார்.

இந்நிலையில் இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருவரும் 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.