வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யிடம் பேசி தந்திரமாக காய் நகர்த்தும் சங்கத்து ஹீரோ.. ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் விடமாட்டாரு போல

தற்போது விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்திற்கான சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடுவதற்கான எல்லா வேலைகளும் மும்மரமாக பார்த்து வருகிறார்கள். அதனால் விஜய் முழு கவனத்தையும் படபிடிப்பில் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு ஹீரோ அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டீசரை ரிலீஸ் பண்ணுவதற்காக விஜய்யை அழைத்திருக்கிறார்.

அவரும் இதற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார். அப்பொழுது விஜய்யை சந்தித்த அந்த ஹீரோ அவருடைய நிறைவேறாத ஆசையை பற்றி பேசி இருக்கிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் ஹீரோ விஷால் தான். அவருடைய ஆசை என்னவென்றால் சினிமாவில் பெரிய இயக்குனராக வரவேண்டும் என்பதன் மிகப்பெரிய கனவு. அதற்காக இவருடைய வீட்டில் மிகவும் போராடி சம்மதத்தை வாங்கிய பிறகு அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் செல்லமே படத்தின் இயக்குனர் காந்தி கிருஷ்ணா இவரை பார்த்திருக்கிறார்.

Also read: மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

அப்பொழுது விஷாலிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். அத்துடன் உங்களுடைய சினிமா கேரியரும் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறி செல்லமே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தொடர்ந்து மற்ற இயக்குனர்களும் இவரை ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சி தான் தற்போது விஷால் முக்கிய நடிகராக வளர்ந்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு மனதில் மிகப்பெரிய ஒரு குறை இருந்திருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று தான் துப்பறிவாளன் 2 படத்தை இவரை இயக்குகிறார். இதனை எடுத்து மறுபடியும் இயக்குனராக அவதரிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை என்பதை பல இடங்களில் இவர் பேசும் போது கூறியிருக்கிறார்.

Also read: விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்

அத்துடன் விஷால் மிகப்பெரிய விஜய்யின் தீவிர ரசிகர். அதனால் தான் இப்பொழுது துவண்டு இருக்கும் நேரத்தில் விஜய்யை வைத்து டீசரை வெளியிட்டால் வெற்றி பெறலாம் என்று ஒரு செண்டிமெண்டுக்காக அவரை கூப்பிட்டு இருக்கிறார். அத்துடன் ஏற்கனவே விஜய்யை பார்க்கும் பொழுதெல்லாம் உங்களை வைத்து நான் ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன் அதற்கு எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறார்.

அதே மாதிரி இப்பொழுது கிடைத்த சந்திப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விஜய் இடம் உங்களை வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்று எடுக்க ஆசைப்படுகிறேன். அதற்கான கதையும் நான் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். நீங்கள் ஒரு முறை மட்டும் கேளுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்யும் கண்டிப்பாக உங்கள் கதையை நான் கேட்கிறேன். அதற்கான நேரம் வரும்போது நானே உங்களை கூப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். விஷாலை பொருத்தவரை எப்படியாவது ஒரு படத்தை எடுக்க வேண்டும் அதுவும் தனக்கு பிடித்த விஜய் வைத்து எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

Trending News