Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரே படத்தில் ஓஹோன்னு பேமஸான 4 காமெடி நடிகர்கள்.. உச்சத்தை தொட்ட பரோட்டா சூரி

ஒரே படத்தில் ஓஹோன்னு பேமஸான 4 காமெடி நடிகர்கள்.. உச்சத்தை தொட்ட பரோட்டா சூரி

Entertainment : எவ்வளவு பெரிய எமோஷனலான படமாக இருந்தாலும் அதில் கட்டாயம் சின்ன காமெடியாவது இருக்கும். இல்லையென்றால் படம் போர் அடித்து விடும். ஒரே படத்தில் ஃபேமஸ்! இப்போது காமெடி நடிகர்களுக்கு மவுஸ் அதிகமாகி கொண்டு வரும் நிலையில் […]

Entertainment : எவ்வளவு பெரிய எமோஷனலான படமாக இருந்தாலும் அதில் கட்டாயம் சின்ன காமெடியாவது இருக்கும். இல்லையென்றால் படம் போர் அடித்து விடும்.

ஒரே படத்தில் ஃபேமஸ்!

இப்போது காமெடி நடிகர்களுக்கு மவுஸ் அதிகமாகி கொண்டு வரும் நிலையில் ஒரே ஒரு படத்தின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தி ஃபேமஸான 4 காமெடி நடிகர்களைப் பற்றி பார்ப்போம்.

விவேக் : விவேக் காமெடிகள் மட்டுமல்லாமல் சிந்தனைப் பேச்சிலும் சிறந்தவர். அவர் மறைந்தாலும் அவரது காமெடி இன்னும் நம்மை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறது. 2003-இல் விக்ரம் நடித்த சாமி படத்தில் நடித்தார். அப்படத்தில் விவேக்கின் காமெடி குறைவாக இருந்தாலும், அவர் காமெடி தான் ஹைலைட். அந்த ஒரு படத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனார் நடிகர் விவேக்.

சந்தானம் : சந்தானம் காமெடி பிடிக்காத ஆளே இல்லை திடீரென சந்தானம் ஹீரோவாக மாறியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான். சந்தானம் நடித்து 13 வருடங்களுக்கு பிறகு வெளியான மத கஜ ராஜா படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

2010-இல் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் சந்தானம் இணைந்து நடித்த காமெடி தான் சந்தானத்தை இந்த அளவுக்கு டாப்பில் தூக்கி விட்டது.

சூரி : ஒரு காமெடி நடிகராக இருந்து ஹீரோவா மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது பெரிய விஷயம் அப்படி இப்போது ஒரு பெரிய ஹீரோவாக வலம் வருபவர் தான் சூரி. 2009-இல் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சூரி.

யோகி பாபு : தனது காமெடியான முக பாவனை மற்றும் பேச்சிலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் யோகி பாபு சிறு குழந்தை முதற்கொண்டு பெரியவர்கள் வரை இப்போது எல்லாரும் யோகி பாபு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

முதலில் இவர் ஃபேமஸ் ஆனதற்கு காரணமே கோலமாவு கோகிலா படம் தான் அந்த ஒரே படத்தின் காமெடி தான் இப்போது யோகி பாபு டாப் ஹீரோவாக இருக்க காரணம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.