ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஒரு வழியா வாடி வாசலுக்கு கிடைத்த நல்ல செய்தி.. கலைப்புலி வயிற்றில் பாலைவார்த்த சூர்யா

Suriya Vaadivasal: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கொடுக்கும் ட்ரீட்டாக இன்று கங்குவா படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் பாடல் வெளியாயிருக்கிறது. இதில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திசா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இதுவரை சூர்யா நடித்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் செலவு செய்து பீரியட் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 300 கோடில் எடுக்கப்பட்ட இப்படம் ஆயிரம் கோடி லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

காளையுடன் தயாராகிய சூர்யாவின் வாடிவாசல்

இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். ஆனால் அதற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் துவங்கப்பட்ட வாடிவாசல் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் இன்று தயாரிப்பாளர் கலைப்புலி தானு கொடுத்த அப்டேட் படி இன்னும் கூடிய விரைவில் வாடிவாசல் படம் தொடங்கிவிடும். அந்த வகையில் ஏற்கனவே படத்துக்காக மூன்று நாட்கள் சூட்டிங் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் அப்பொழுது சில எதிர்பாராத ஆபத்துக்கள் ஏற்பட்டதனால் அதை வேறு விதமாக சரி செய்து படத்தை துவங்கலாம் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறோம். அந்த வகையில் வெற்றி மாறனின் விடுதலை இரண்டாம் பாகமும் முடியப்போகுதால் அடுத்து சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு சில மாதங்களில் வாடிவாசல் படத்திற்கு பிள்ளையார் சுழி போடுவோம் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

புறநானூறு படம் மாதிரி வாடிவாசலும் சூர்யாவுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று ரசிகர்கள் ஒரு விதமான பயத்திலேயே இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் காளை தயாராகிவிட்டது வாடிவாசல் ஆரம்பமாக போகிறது என்று நல்ல செய்தி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த வருடம் கங்குவா படம் போல் அடுத்த வருடம் வாடிவாசல் படத்தை எதிர்பார்க்கலாம்.

கங்குவா படத்தின் அப்டேட்

Trending News