விடுதலை பட வெற்றிக்குப் பின் சூரி கருடனில் சொக்கனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் கருடன் வசூல் ரீதியாக வேட்டையாடி வருகிறது.
Soori
Sasikumar
Unni Mugundan
Samuthrakani
RV Uthayakumar
Yuvan Shankar Raja(Music)
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உன்னி முகுந்தன், சசி குமாருக்கு விஸ்வாசியாக சூரி நடிப்பில் மிரட்டி இருப்பார். சொக்கன் கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இடைவெளியில் இந்த படத்தை வெளியிட்டு வெற்றிமாறன் தரமான சம்பவம் செய்துள்ளார்.
வசூலை வாரி குவிக்கும் சொக்கன்
சூரியன் மார்க்கெட் உயர்ந்தது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் வசூல் ரீதியாக 35 கோடியை தாண்டி உள்ள கருடன் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் 27.5 கோடி வசூல் செய்துள்ளது.
இதனால் சூரியன் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மட்டுமில்லாமல் இந்த படம் வசூல் ரீதியாக 50 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியை தாண்டி விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து சூரியை வைத்து வெற்றி காணும் வெற்றிமாறனுக்கு இவர் ஒரு ராசியான ஹீரோவாக மாறியதால் இன்னும் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டு மடங்கு வசூலை எட்டி இருப்பதால் வெற்றிமாறன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதற்கு முக்கியமான காரணம் முதல் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேல் வசூலை தாண்டி விட்டதாம்.
இனியும் காமெடி ஹீரோவாக சூரி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த கதையும் கதாபாத்திரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நம்ம சினிமாவுக்கு ஒரு வகையில் நல்லதாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காமெடி ஹீரோக்கள் இல்லை என்பது வருத்தம் தான். இந்த வாரம் வெளிவந்துள்ள 7 படங்கள்,
Anjaamai – Vidharth
Weapon – Sathiyaraj
IniOruKadhalSeivom
Pitha
Haara – Mike mohan
Kaazh
Thandupalaiyam
ஒரு வாரங்களில் கருடன் செய்த வசூல் வேட்டை
- சூரியின் கருடன், மூன்றே நாளில் அள்ளிய வசூல் நிலவரம்
- வசூல் வேட்டையாடும் சூரியின் கருடன், 2ம் நாள்
- முரட்டு ஹீரோ படத்தை அப்படியே சுட்ட கருடன் டீம்