AL Vijay Favorite Heroine: முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் தான் ஏஎல் விஜய். இவர் இயக்கிய கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது. அப்படிப்பட்ட இவர் இயக்கக் கூடிய படங்களில் முக்கால்வாசி இந்த நடிகைக்கு எப்பொழுதுமே முன்னுரிமை கொடுத்து விடுவார்.
அந்த நடிகை சினிமாவிற்குள் நுழைவதற்கு இவர் இயக்கிய படம் தான் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஸ்கார நடிகையாக வந்தவர் தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.
பிறகு இவருடைய மார்க்கெட் சரிவை சந்தித்த பொழுதும் ஏஎல் விஜய் தான் இவரை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். அந்த வகையில் எமி ஜாக்சன் கடைசியாக நடித்த படமும் ஏ.எல் விஜய் இயக்கி அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1. அதனாலேயே என்னமோ எமி ஜாக்சனுக்கு ஏ.எல் விஜய் படங்களுக்கு மட்டும் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விடுகிறார்.
Also read: பொங்கல் ரேசில் திடீரென இணைந்த அருண் விஜய்.. ரஜினியால் அடித்த லக்
அதுவும் இவர் நடித்த மதராசபட்டினத்தில் துரையம்மா கேரக்டர் இன்னும் வரை பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஐ, தங்க மகன், தெரி, 2.0 போன்ற படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். இதில் இவருடைய கேரியரில் மிகப்பெரிய ஃபெயிலியர் படம் என்று சொன்னால் ஒன்றே ஒன்று தான்.
விக்ரம் நடிப்பில் வெளிவந்த தாண்டவம். மற்றபடி எமி ஜாக்சன் நடித்தால் அந்த படம் ஹிட் ஆகி விடுகிறது. அதனால் இனி ஏஎல் விஜய் இயக்கம் அடுத்த படங்களிலும் எமி ஜாக்சன் கண்டிப்பாக ஒரு கேரக்டர் மூலமாக வந்து கொண்டே இருப்பார்.
Also read: ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்