எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலே தெனாவட்டு காட்டும் ஹீரோயின்

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் எம்ஜிஆருக்கு தனி இடம் உண்டு. அந்த காலத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருமே எம்ஜிஆர் முன் நின்று தான் பேசுவார்கள். எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் எம்ஜிஆருக்கு மரியாதை கொடுப்பார்கள்.

இப்போதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரை கடவுளாய் பாவித்து வணங்கி வருகிறார்கள். இந்நிலையில் எம்ஜிஆரை ஒரே ஒரு நடிகை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பெயர் சொல்லிக் கூப்பிடுவாராம். இதைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் பிரமித்து போய் நிற்பார்களாம்.

Also Read : எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!

அவ்வாறு எம்ஜிஆரை உரிமையுடன் அழைக்கும் நடிகை தான் பானுமதி. இவருக்கும் எம்ஜிஆர்ருக்கும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. மேலும் பானுமதி நடிகை மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் இயக்குனர் மற்றும் முதல் தயாரிப்பாளர் என்ற பெருமையும் இவரை தான் வந்து சேரும். அதேபோல் பானுமதி சற்று கர்வமும் உடையவராம். அவரைப் பார்த்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவருமே அமைதியாகி விடுவார்களாம்.

Also Read : புகழின் உச்சியில் இருந்த எம்ஜிஆர், சிவாஜி.. ரஜினியின் கால்ஷூட்டுக்காக தவம் கிடந்த சம்பவம்

அந்த அளவுக்கு ஒரு பெண்ணாக அனைவரையும் அடக்கி ஆண்டு உள்ளார். மேலும் 1947 இல் இவர் சினிமாவில் நுழைந்து 1992 வரை தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவரது கடைசி படம் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படம் தான். இதில் பிரசாந்தின் பாட்டியாக பானுமதி பட்டையை கிளப்பி இருப்பார்.

இவ்வாறு சிறந்த ஆளுமையாக இருந்த பானுமதிக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் கிடைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு இசை கல்லூரியில் முதல்வராகவும் இவர் பணியாற்றி இருந்துள்ளார். கடந்த 25 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் பானுமதி உயிர் நீத்தார்.

Also Read : 40 வயதில் ஹீரோவான 5 நடிகர்கள்.. எம்ஜிஆரை தூக்கி சாப்பிட்ட எலும்பு கடி மன்னன்