Kavin: நேரம் காலம் கூடிவிட்டால் நடக்கிறது எல்லாமே இனி நல்லதாகவே நடக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கவின் அடுத்த அடுத்த படங்கள் மூலம் மக்களின் ஃபேவரிட் ஹீரோவாக இடம் பிடித்து வருகிறார். அந்த வகையில் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது. கடைசியாக நடித்த ஸ்டார் படத்தில் கூட கதைகள் பெருசாக இல்லை என்றாலும் கவின் நடிப்பு மக்களை கவர்ந்து விட்டது.
அத்துடன் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது. இதனை தொடர்ந்து கிஸ், மாஸ்க், பிளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது நவம்பர் மாதத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் கிஸ். இப்படத்தை டான்ஸ் மாஸ்டராக இருக்கும் சதீஷ் இயக்கி வருகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இடத்தை அசால்ட் ஆக தட்டி தூக்கிய கவின்
இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பொதுவாக அனிருத் எந்த படங்களில் இசையமைத்தாலும் அந்த படங்களும் சரி, பாடல்களும் சரி மக்களிடம் மிகவும் பிரபலமாகி வெற்றி பெற்று விடும். அந்த அளவிற்கு அனிருத்துக்கு ஒரு ராசி இருக்கிறது என்று சொல்லலாம். அதிலும் இளம் ஹீரோவாக இருக்கும் கவின் உடன் அனிருத் கூட்டணி வைத்ததால் டபுள் மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அது மட்டுமல்ல அனிருத் இசையமைத்ததால் ஆடியோ உரிமை மட்டும் கிட்டத்தட்ட 14 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதால் அந்த பாடலையும் சீக்கிரமாக முடித்துவிட்டு நவம்பர் மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கவினுக்கு இனி ஏறு முகம் தான் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு படங்களிலும் அவருக்கான இடத்தை பிடித்துக் கொண்டு வருகிறார். இவர் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்வதற்கு ஏற்ப கவின் பிக் பாஸ் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதேபோல் கவின் நடித்து வரும் பிளடி பெக்கர் படத்தை இயக்குனர் நெல்சன் தான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது. நிற்காமல் ஓடணும் ஜெயித்துக் கொண்டே ஓடணும் என்ற ஃபார்முலா படி கவின் வேகமாக வளர்ந்து வருகிறார்.
- Kavin: ஓவர் ஆட்டம் ஆடாதீங்க, காணாம போயிடுவீங்க கவின், மணி
- Kavin: வெற்றிமாறன் கூட்டணியில் புது படத்திற்கு அஸ்திவாரத்தை போட்ட கவின்
- Kavin: அதிக சம்பளத்தை கேட்ட கவினுக்கு என்ன தகுதி இருக்கு