ஹனிமூன் இப்ப இல்லடா.. விக்கி தலையில் இடியை இறக்கிய நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணம் முடிந்த பின் நடிகை நயன்தாரா ஹனிமூன் செல்லாமல் ட்ரீட்மென்ட் இருக்கு செல்ல உள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து இருவரும் காதலித்து வருகின்றனர். இதனிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பின்பு வரும் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இருவருக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் திருமணத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது= இதனிடையே நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின் கேரளாவிற்கு 6 மாதம் ட்ரீட்மென்ட்காக செல்ல உள்ளார்.

நடிகை நயன்தாராவுக்கு 36 வயதான நிலையில் தற்போது தனது சுருக்கமான சருமத்தை சரி செய்வதற்காகவும்,அடிக்கடி நயன்தாரா கருத்தடை மாத்திரையை பயன்படுத்தியதால் அவரது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஆறுமாதம் நயன்தாரா தங்கி, இந்த இரண்டு பிரச்சனைகளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விட்டு, ஹனிமூனுக்கு செல்ல உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆறு மாதத்திற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒன்றாக தங்க கூட முடியாதாம்.

இதனிடையே நயன்தாரா கர்ப்பப்பையை சரி செய்வதற்காக கேரளாவில் ட்ரீட்மெண்ட் எடுக்க உள்ள நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிளான் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →