புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளி செத்துட்டான்.. ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், படத்தை பிளாப்பாக்கிய 5 இயக்குனர்கள்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது இசையின் மூலமாக பல கோடி உள்ளங்களை கவர்ந்தவர். மேலும் ஒரு படத்தில் ஏ ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றாலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்படி இருந்தபோதிலும் சில இயக்குனர்கள் இவரது இசையை வைத்தே படத்தை ஒட்டிரலாம் என நினைத்து படத்தை சரியான கதை இல்லாமலும், இயக்கம் சரியில்லாமலும் படத்தை தோல்வியடைய வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட 5 இயக்குனர்களின் படத்தை தற்போது பார்க்கலாம்.

சங்கமம்: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரகுமான், மணிவண்ணன், விந்தியா உள்ளிட்டோர் நடித்திருப்பர். கலையில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் கிடையாது என்பதை உணர்த்தும் விதமாக இப்படத்தின் கதை அமைந்திருந்தாலும், ஒருகட்டத்தில் காதல் கதையாக மாற்றி இப்படத்தை இயக்குனர் படுத்தோல்வி அடைய வைத்திருப்பார். இப்படத்தில் மழைத்துளி, சொக்கியமா என ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட அத்தனை பாடல்களும் சக்கைப்போட்ட நிலையில், தயாரிப்பாளரின் தலை ஓரளவு தப்பியது.

Also Read:  ஏ.ஆர்.ரஹ்மான்க்கு போட்டியாக வாரிசு இசையமைப்பாளர்.. பாயுமா இந்த குட்டி புலி?

தாஜ்மஹால்: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகனும்,நடிகருமான மனோஜ் நடிப்பில் இப்படம் வெளியானது. இத்தனைக்கும் இப்படத்தின் கதையை மட்டும் மணிரத்னம், உட்பட மூன்று இயக்குனர்கள் எழுதி இயக்கப்பட்டது. காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்ட பின்பும் கிளைமாக்ஸில் ஹீரோவுடன் இணையும் காட்சி எதார்த்தமாக இல்லாத நிலையில், இப்படம் பெருந்தோல்வியடைந்தது. மேலும் இப்படத்தில் ஈச்சி எலுமிச்சி,சொட்ட சொட்ட என ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மட்டும் இல்லையென்றால் பாரதிராஜா அதோகதியாகியிருப்பார். ‘

என் சுவாச காற்றே: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ். ரவி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அரவிந்த்சாமி, இஷா கோப்பிக்கர் உள்ளிட்டோர் நடித்திருப்பர். கம்ப்யூட்டர் ஹேக் செய்து வரும் ஹீரோ அதனால் வரக்கூடிய காதல், பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை எப்படி கையாளுகிறார் என்பது தான் கதை. ஆனால் இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை விட கவர்ச்சிக்கு முக்கியதுவம் கொடுத்ததால் படம் படுதோல்வி அமைந்தது. இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஜும்பலக்க, காதல் நயகரா, சின்ன சின்ன உள்ளிட்ட பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டானது.

Also Read: சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அவதரிக்கும் புது ரூட்.. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரம்மாண்டமான படம்

லவ் போர்ட்ஸ்: 1996 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபுதேவா, நக்மா உள்ளிட்டோர் நடித்திருப்பர். காதலுக்காக தனது காதலையே இழக்க தயாராகும் பிரபுதேவா கடைசியில் நக்மாவுடன் எப்படி மீண்டும் இணைகிறார் என்பதுதான் கதை. இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், படத்தின் கதையில் சுவாரசியம் இல்லாததால் படம் தோல்வியடைந்தது. மேலும் மலர்களே, நோ ப்ராப்ளம் உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பியது.

மிஸ்டர் ரோமியோ: இயக்குனர் கே.எஸ் ரவி இயக்கத்தில் பிரபுதேவா, மதுபாலா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் வெளியானது. ரோமியோ,மெட்ராஸ் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபுதேவாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டாலும், உடன்பிறப்பை கொன்றவர்களை பழிவாங்கும் பழைய கதையாக அமைந்ததால் இப்படம் பெருந்தோல்வியடைந்தது. இருப்பினும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ரோமியோ ஆட்டம் போட்டால் பாடலில் பிரபுதேவாவின் நடனத்தை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் கூடியது. இப்படத்தில் மட்டும் அந்த பாடல் இல்லையென்றால் இன்று பிரபுதேவாவே இருந்திருக்கமாட்டார்.

Also Read: மாமன்னன் பட ரிலீஸ் க்கு வந்த புது சிக்கல்.. சுத்தி அடிக்கும் கர்மாவால் உதயநிதி படும் பாடு

Trending News