50,000 வரை இலவச ஸ்காலர்ஷிப்.. என்ன தகுதி, எப்படி அப்ளை பண்ணனும், படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கோங்க

Scholarship: கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் மட்டுமல்லாமல், நிறைய தொண்டு நிறுவனங்களும் முன்வந்து கல்வி உதவித்தொகை வழங்குகின்றன. அப்படி ஒரு நிறுவனம்தான் Mirae Asset Foundation. இந்த நிறுவனம் 2018 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. கல்விப் பயலும் மாணவ மாணவிகளுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

தகுதி

இந்த நிறுவனம் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு 40 ஆயிரம் மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு 50,000 உதவித்தொகை வழங்குகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அறுபது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் எட்டு லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு ITR சர்டிபிகேட் வழங்க வேண்டும் பெண்கள், ஊனமுற்றவர்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்.சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து கட்டணச் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். கல்லூரி கட்டணம் 40 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது

கல்வி உதவித் தொகை கல்லூரிக்கு TT முறையில் அனுப்பப்படும். இந்தியாவில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →