கலரை வைத்து தரத்தை சொல்லும்.. தரமான குடிமகனின் அனுபவ உண்மையை கூறும் ஷாக்கிங் ரிப்போர்ட்! 

A shocking report of a Alcoholics’s experience: “நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்! இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!” என்று மது பிரியர்களின் அலப்பறை தாங்க முடியாத ஒன்றாக உள்ளது.

தினமும் மது குடிப்பதை வழக்கமாக்கி தனது அன்றாட பழக்கமாகவும் மாற்றிக் கொள்கின்றனர். அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் அவர்களது வாழ்க்கையும் அவர்களைச் சார்ந்தவர்களின் சோகங்களும் தொடர்கதை ஆகிவிடுகிறது.

சரி மது குடிப்பவர்கள்,  தாங்கள் கொடுக்கும் காசிற்கு தக்கவாறு தரமான மதுவை தான் குடிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.  முழுக்க முழுக்க தற்போது  இந்தியாவில் தயாராகி வரும் மது வகைகள் பல, ஸ்பிரிட்டில் பிளேவர் சேர்த்து தரமற்ற மது வகைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் முதலில் நரம்பு சம்பத்தமான நோய்களுக்கு உள்ளாகி இறுதியில் உயிருக்கே ஆபத்தாகும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது. இதை குடிமகன்கள் யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

அப்போது கிடைக்கும் போதைக்கு மட்டுமே ஆசைப்பட்டு, பின்னால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

அரசின் பூரண மதுவிலக்கு  என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்ட நிலையில்,  டாஸ்மார்க்கில் குறைந்தபட்சம் 150 முதல் 180 காசு கொடுத்து வாங்கி குடிக்கும் மது பிரியர்களுக்கு, அதன் தரம் பற்றிய அறிவிப்பு முறையாக அறிவிக்கப்படாதது என்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான்.

அடுத்த கட்ட போதைப் பொருட்களை தேட ஆரம்பிக்கும் சமூகம்

சமூக ஆர்வலர் ஒருவர், இவ்வாறு விற்கப்படும் மது வகைகளில் அதன் கலரை வைத்து தரத்தை ஆய்வு செய்து, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆதாரத்துடன் பதிவிட்டு உள்ளார். 

தற்காலிக நேரத்தில் மூளையில் சற்று மாற்றத்தை உண்டாக்கி விட்டு, உணவு குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி விடுவதாக செய்முறை விளக்கத்துடன் நிரூபித்து உள்ளார்.

மக்கள் இவ்வாறு தரங்கெட்ட மதுவகைகளை உபயோகித்து திருப்தி இல்லாமல், அடுத்த கட்ட  வீரியமிக்க மது வகைகளை தேட ஆரம்பிக்கும் முன்,

மற்ற மாநிலங்களைப் போல் ஓபன் மார்க்கெட்டில், அதன் தரத்தை நிர்ணயம் செய்து தரக்கட்டுப்பாடுகளுடன் கூடிய நிஜ மது வகைகளை உபயோகிக்கும் போது, மதுவிற்கு அடிமையாகுவது என்பதை கட்டுப்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.  

இது தொடர்பாக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றும் விடுத்துள்ளார்.

ஆகமொத்தம் மதுவை ஒழிக்க முடியாது! கட்டுப்படுத்தவாவது செய்யலாம் என்ற நிலைமைக்கு அச்சாரம் போட்டுள்ளார் இந்த சமூக ஆர்வலர். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →