விஜய்யின் அரசியலை விமர்சிக்கும் அம்பிகா.. பதவிக்கு போடும் அஸ்திவாரம்

Vijay- Ambika: பொது வாழ்க்கைக்கு வந்தா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் வாங்க வேண்டும் என்று ஒரு சொலவடை உண்டு. அப்படித்தான் விஜய்யின் அரசியல் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பொழுது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஜெயித்த விஜய் தற்போது tvk மூலம் அரசியல்வாதியாக ஜெயிப்பதற்கு போராடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் விஜயின் அரசியலுக்கு எதிராக பல கருத்துக்கள் பலரும் முன்வைத்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் 80களில் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகாவும் இணைந்து இருக்கிறார். அதாவது விஜய் செய்யும் செயல்களை மட்டுமே உற்று நோக்கி பார்த்து அதில் குறைகளை கண்டுபிடித்து குறை சொல்வதே வழக்கமாக வைத்து வருகிறார்.

அப்படித்தான் சமீபத்தில் மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பெண் பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினரை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தவுடன் கொடுத்த பேட்டியில் விஜய்யின் அரசியலை தாக்கும் வகையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வராமல் இருப்பவர்களை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது.

தன்னுடைய போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே மக்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் பங்கெடுப்பதில்லை. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு ஏழைகளின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத படி இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்ட பொழுது நிச்சயமாக நான் வருவேன் என்று பதவிக்கு அஸ்திவாரத்தை போடும் வகையில் ஆசையை கூறி இருக்கிறார். இதை அடுத்து விஜய், தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அவர்கள் இடத்திற்கு சென்று பேசாமல் அவர்களை ஒரு இடத்துக்கு வரச் சொல்லி பேசுவது நியாயமில்லை என்று அப்பொழுதும் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

இப்படி விஜய் செய்த எல்லா விஷயங்களிலும் விமர்சித்த அம்பிகா தற்போது மாநாட்டில் விஜய் எங்கள் அண்ணன் விஜயகாந்த் என்று சொன்னதுக்கும் ஒரு விமர்சனத்தை வைத்திருக்கிறார். அதாவது தனக்கு ஒரு ஆதாயம் வேண்டும் என்றால் விஜயகாந்த் பெயரை பயன்படுத்துகிறார். ஆனால் அவருடைய பையன் சண்முக பாண்டியன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

அவருக்கு உதவும் வகையில் அவருடைய படத்தில் ஒரு பாட்டுக்கோ அல்லது ஒரு சண்டை காட்சிகளிலோ நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்று வரவில்லை. இல்லை என்றால் அவங்க படத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அதுவும் பண்ணவில்லை. இதெல்லாம் விஜயகாந்துக்காக அவர் பண்ணி இருக்க வேண்டும். ஆனால் அது எதுவும் செய்யாமல் அவருடைய பெயரை மட்டும் பயன்படுத்தி அரசியலில் ஆதாயம் தேடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.